நாள் ஒன்றுக்கு ஒருவர், 5 கிராம் உப்பு தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
நாம் சாப்பிடும் உணவில் இருந்து (சாப்பாடு, பருப்பு, பழம், காய்கறி) ஒரு கிராம் உப்பு நமக்கு கிடைத்து விடும். மீதம், நான்கு கிராம் உப்பை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நிறைய பேர், அப்பளம், வற்றல், மோர் மிளகாய், உப்பு பிஸ்கட், உப்பு பிரட் என பலவாறாக உப்பை சேர்த்துக் கொள்கின்றனர்.
பதப்படுத்தப்பட்ட உணவு, குளிர் பானங்கள், சாஸ், ஊட்டச்சத்து பானங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இவற்றில் எல்லாம், உப்பு கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறது. இவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பதப்படுத்தாத உணவுகள் சாப்பிடுவதை விட்டு விட்டு, எப்போதும், புதிதாக வந்த காய்கறி, பழங்களை சாப்பிடுவதே நல்லது.
அளவான உப்பு பயன்பாடு, ரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கலாம். நெய், வெண்ணெய், ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கருவாடு, ஆட்டுக்கால், ஈரல், மூளை, பாயா, கருவாடு, முந்திரி, பிஸ்தாவில் எல்லாம், கெட்ட கொழுப்புகள் உள்ளன.
இவற்றை உணவில் சேர்க்க வேண்டாம். ஆடை நீக்கிய பால், வால் நட், பாதாம் பருப்பில் நல்ல கொழுப்புகள் உள்ளன, இவற்றை, மிதமான அளவில் பயன்படுத்தலாம்.
அசைவ பிரியர்கள், தோல் நீக்கிய கோழி இறைச்சி, முட்டையின் வெள்ளைக் கரு, மீன் சாப்பிடலாம். பொதுவாக, சோடியம் அளவு, 2.3 கிராம் என்ற அளவில் இருந்தால் போதும், 5 கிராம் உப்பில், 2.3 கிராம் சோடியம் கிடைத்து விடும்.
உப்புக்கும், ரத்த அழுத்தத்துக்கும் தொடர்புண்டு. உப்பு அதிகமானால், ரத்த அழுத்தம் கூடும் என்பதை மறந்து விட வேண்டாம்.
ரத்த அழுத்தம் கூடினால், அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வரும். எலுமிச்சம்பழம், புதினா, கொத்தமல்லியை உணவில் சேர்த்துக் கொண்டால், உப்பின் தேவை குறையும்.
கீரை, பருப்பு, சுண்டல், தக்காளி, சாத்துக்குடி, திராட்சை போன்றவற்றில், பொட்டாசியம் உள்ளதால், ரத்த அழுத்தம் குறையும்.
கிட்னி பாதிப்பு உள்ளோர், பொட்டாசியம் அதிகம் உள்ள இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம். மீறினால், இதய பாதிப்பை ஏற்படுத்திவிடும். பொதுவாக, தண்ணீர் அதிகம் குடியுங்கள்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக