மூன்று
வருடங்களாக தண்ணீர் அருந்தாமல், வேறு எந்த திரவப்பொருளும் கூட அருந்தாமல்
அரோக்கியமாக வாழ்கிறார் பீட்டர் பிளாக் என்ற 26 வயது இளைஞர்.மேலும்,
தண்ணீர் குடிக்காத உணவுமுறையில் ஒரு மனிதன் 150 வயது வரை ஆரோக்கியமாக
வாழலாம் என்றும் அடித்து கூறுகிறார். இவர் 2012 ம் ஆண்டு மே 5 ம் திகதி
மாலை 5 மணிக்கு கடைசியாக தண்ணீர் குடித்ததாக கூறுகிறார்.
முன்னாள் செவிலியராக தன்னை பதிவுசெய்திருந்த இவர் வெப்கேம் மொடலாகவும், போர்னோகிராபி நடிகராகவும் எழுத்தாளராகவும் உள்ளார்.
குறிப்பாக, நீர் அருந்தாமல் வாழும் உணவுமுறை பற்றிய புத்தகங்கள் அதிகம்
எழுதுகிறார். வலைதளத்தின் மூலமாகவும் தனது உணவு பழக்கத்தை அதன் சரியான
விளக்கத்தை பதிலாக அளிக்கிறார்.
இவரது கருத்தை பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும், ஊட்டச்சத்து பற்றிய சிறப்பு வல்லுநர்கள் சிலர் ஏற்றும் உள்ளனர்.
இவர் இந்த தீவிர மனமாற்றத்துக்கு வர யாரும் காரணமல்ல, சுயமான அனுபவ
சிந்தனையில் முடிவெடுத்து கடைப்பிடிப்பதாக கூறுகிறார். பிறரையும் தன்னை போல
உணவுமுறையில் சுயமான முடிவெடுக்க கூறுகிறார். ஆனாலும், யாரையும்
நீரருந்தாமல் வாழ அவர் வலியுறுத்தவில்லை.
இவர் நீர் அருந்திவந்த போது, இரவில் 3 முறையாவது சிறுநீர் கழிக்க
தூக்கத்திலிருந்து எழுவது வழக்கம் இதற்கு காரணம் நீர் அருந்துவதுதான்
தேவையில்லாமல் ஏன் இந்த நீரை அருந்த வேண்டும். நீரில் நிறைய குளோரின்,
புளோரின் போன்ற ரசாயனங்கள் உள்ளன.
வடிகட்டுதல் முறையில் ஒரு ரசாயனத்தை நாம் அகற்றினாலும் வேறொரு ரசாயனம் மீண்டும் அதில் உள்ளே வருவதை தவிர்க்க முடியாது என்கிறார்.
நாம் நீர் அருந்துவது ஒரு வழக்கமாகிவிட்டது அவ்வளவுதான். நாம்
சாப்பிடுகிற அசைவ உணவுகளாலும் நீர் தேவைப்படுகிறது. காய்கறிகள், பழங்கள்
போன்ற சைவ உணவுகள் மட்டும் சாப்பிடும்போது உடலுக்கு போதுமான நீர்சத்து
அவற்றிலேயே எடுத்துக்கொள்ளப்படுகிறது.
பழங்கள், காய்கறிகள் என 800 லிருந்து 1000 கலோரி வரையிலான உணவுகள்
ஒருநாளைக்கு எடுத்துக்கொள்கிறார். ஆரம்பத்தில் நீரை தவிர்க்க சோடா,
சொக்லெட், பால் போன்றவற்றை அருந்தியுள்ளார்.
பிறகு முழு கட்டுப்பாட்டுடன் பழங்களை வைத்தே நீர் சமநிலை
செய்துகொள்கிறார். கேரட், கிவி சாப்பிட்டால் அவை ஜீரணிக்க 2 ஆப்பில்,
வழைப்பழம் சாப்பிடுகிறார்.
பீட்டர் பிளாக் சிறுவயதிலிருந்து டீ, காபி, புகை, மது, என எந்த தீயப்பழக்கத்திற்கும் இடமளிக்காதவர்.
உடல் ஆரோக்கியம் பற்றிய சிந்தனை இவருக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்து
வந்துள்ளது. நீர் எடுத்துக்கொள்ளாத முயற்சியையும் ஆரோக்கிய அடிப்படையிலான
பின்பற்றுதலே.
இவர் ஆரம்பத்தில் வீட்டில் இதுபற்றி கூறியபோது, அம்மா கடுமையாக
சத்தமிட்டிருக்கிறார். தந்தை அதிர்ச்சியடைந்திருக்கிறார். ஆனால், நாளடைவில்
மகன் சொல்லை கேட்டு அசைவ பிரியர்களான அவர்கள் சைவமாகிவிட்டனர். ஆனாலும்
அளவான நீர் அருந்திவருகின்றனர்.
ஒரு நாள் நாம் நீர் அருந்தாவிட்டாலே உடலில் இறுக்கமும் சூடும் பரவுகிறது. அதே உடலைவைத்து 3 வருடமாக நீரின்றி வாழ்கிறார் இந்த இளைஞர்.
மனிதனுக்குள் மருத்துவத்துறைக்கும் எட்டாத விடயங்கள் எவ்வளவோ
இருக்கிறது. மருத்துவர்கள் மட்டுமல்ல மெய்ஞானிகளும் இதை வியந்து
கூறுகின்றனர்.
’உன்னை புரிந்துகொள்ளாமல் உலகை புரிந்துகொள்ள முடியாது. உன்னை
புரிந்துகொண்டால் உலகில் புரிந்துகொள்ள வேறு ஒன்றுமில்லை’ என்று
மெய்ஞானிகள் கூறுவதும் இதைத்தானோ!.
மரு. சரவணன்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக