தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 நவம்பர், 2015

"தீபாவளி லேகியம்" சாப்பிடுவது எதற்காக?


"தீபாவளி லேகியம்" சாப்பிடுவது எதற்காக? சாப்பிட மறந்துவிடாதீர்கள்!

தீபாவளிக்கு தித்திக்கும் பலகாரங்களை செய்யும் நீங்கள், கண்டிப்பாக தீபாவளி லேகியம் செய்ய மறந்துவிடாதீர்கள்.
தீபாவளி லேகியம் எதற்காக?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் பல்வேறு வகையான உணவு பண்டங்களை தயாரிப்போம்.

முறுக்கு, அதிரசம், வடை, சீடை போன்ற நொறுக்கு தீனிகளும் பிரியாணி, மட்டன் சிக்கன், மீன் என பலவகை உணவுகளும் தயாரித்து அன்றைய நாளில் உற்றார் உறவினர்களோடு அமர்ந்து சந்தோஷமாக சாப்பிடுவோம்.

ஆனால் இந்த சந்தோஷம் நீடிக்க வேண்டும் அல்லவா, ஏனெனில் இவற்றை சாப்பிட்ட பின்னர் வயிற்று உபாதைகளுக்கு ஆளாகிவிட்டோம் என்றால், அன்றைய நாள் கொண்டாட்டம் ஒரு நொடியில் ஓடிப்போய்விடும்.

அதனால் நீங்கள் சாப்பிட்ட பின்னர் தீபாவளி லேகியத்தை சாப்பிட மறந்துவிடாதீர்கள்.

இந்த லேகியம், சாதாரண தலைவலி, காய்ச்சலில் தொடங்கி, அஜீரணம், அசதி வரை அனைத்துப் பிரச்சனைகளையும் குணப்படுத்திவிடுகிறது.

தேவையான பொருட்கள்

தனியா - அரை கப்

ஓமம் - 50 கிராம்

சுக்கு, மிளகு, திப்பிலி - தலா 10 கிராம்

இஞ்சி சாறு - அரை கப்

வெல்லம் அல்லது கருப்பட்டி - 100 கிராம்

நெய் - கால் கப்

ஏலக்காய் தூள் - சிறிது

செய்முறை

தனியாவை அரைமணி நேரம் ஊற வைத்து மிக்சியில் நன்கு அரைத்து வடிகட்டி வைக்கவும்.

பிறகு சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமத்தை மிக்சியில் போட்டு நைசாக பொடி செய்து கொள்ளவும். அடி கனமான கடாயில் தனியா விழுது, பொடி செய்து வைத்துள்ள கலவை இரண்டையும் சேர்த்து வெல்ல துருவலும் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். கலவை நிறம் மாறி, பழுப்பு நிற கலரில் வரும் போது இறக்கி, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

தீபாவளி லேகியம் ரெடி, ஆனால் தீபாவளியன்று இதனை சாப்பிடுவதற்கு மறந்துவிடாதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக