தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 டிசம்பர், 2013

லக்ஷ்மி கடாட்சம் பெருக..!

அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று பெயர்.அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.முதலில் சிரமமாக இருந்தாலும் இப்படிப் பழகிவிட்டால் பிறகு பழக்கமாகிவிடும்.இப்படி சிவது ஆரோக்கியம்,நீண்ட ஆயுள் முதலிய பலனை கொடுக்கும். அந்த நேரத்தில் தேவர்களும் ,முன்னோர்களும் நம் வீட்டை நோக்கி வருகிறார்கள் .அப்போது விழித்திருந்து மனதால் அவர்களை வழிப்பட்டால் அவர்களைக் கௌரவித்து வரவேற்பதாகும் .அவர்கள் சந்தோசப்பட்டு நமக்கு நன்மை செய்வார்கள்.

அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன் பின்னரே தலை வாசலை திறக்க வேண்டும் .

அதிகாலை விழித்தவுடவுன் பசுவையாவது ,தன் முகத்தையாவது ,தன் வலது உள்ளங்கையையாவது
முதலில் பார்த்து விட வேண்டும்.

செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் 5 முக கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிப்பட வேண்டும்.

வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும்.அவர்களுக்கு மஞ்சள்
கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோசமும் பெருகும்.

ஒவ்வொரு பௌர்ணமி அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி,செண்பக மலர் இவைகளால்
அர்ச்சித்து ,பால்,பாயசம்,கல்கண்டு ,கனி வகைகளை வைத்து வணங்கிய பின்னரிய இரவு உணவு உன்ன வேண்டும்.

வைரம்,வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக
அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும்கொடுக்க கூடாது. தன காலத்திருக்குப் பின்னரே அவர்களுக்குச் சேர வேண்டும்,முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக்கொடுக்கலாம்..

தவிர்க்க வேண்டிய சில.....

ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்க கூடாது.கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும் .

வாசற்படி,அம்மி,ஆட்டுக்கல் ,உரல் இவைகளில் உட்காரக்கூடாது .

இரவு நேரங்களில் பால்,மோர்,தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது .

வெற்றிலை வாழையிலை இவைகளை வாட விடக்கூடாது . வெற்றிலையை தரையில் வைக்க கூடாது .

சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது .

குத்து விளக்கை தானாக அணையவும் விடக்கூடாது , ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.

வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது.எழவு என்றும் கூறக்கூடாது.

அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.

துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்ககூடாது .

உப்பைத் தரையில் சிந்தக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக