குருவாய் வருவாய் முருகா!கந்தபுராணத்தில் திருத்தணி பற்றி சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. வெகுதொலைவில் இருந்தபடியே, திருத்தணி என்ற பெயரை உச்சரித்தாலும், கேட்டாலும், நினைத்தாலும், அவ்வூர் இருக்கும் திசை நோக்கி வணங்கினாலும் புண்ணியம் கிடைக்கும் என்கிறது தணிகைப்புராணம். இத்தலத்தின் பெருமையையும், மகிமையையும் வள்ளிக்கு முருகப்பெருமானே எடுத்துச் சொன்னதாக கந்தபுராணம் கூறுகிறது. திருத்தணி முருகனின் அருள் பெற்ற அடியார் முத்துச்சுவாமி தீட்சிதர். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஓருவரான இவர், திருத்தணி முருகன் சந்நிதியில் தியானித்துக் கொண்டிருந்தார். அப்போது, முருகன் சிறுபாலகனாய் வந்து, அவருக்கு கற்கண்டு கொடுத்தார். உடனே தீட்சிதர் முருகனைப் பற்றி பல கீர்த்தனைகளைப் பாடினார். தம் கீர்த்தனைகளில் முருகனை ""குருகுஹ என்று போற்றுகிறார். அவரையே குருவாக ஏற்றார்.
கலியுகத்தில், சிறந்த குரு கிடைக்காத பட்சத்தில் திருத்தணி முருகனையே மானசீக குருவாக ஏற்று வழிபடலாம். "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று அருணகிரிநாதரும் முருகனைப் போற்றுகிறார்.
பிள்ளைகள் கருத்துக்கு முன்னுரிமைகொடுங்க!
முருகனுக
கருவறைக்குள் திரைச்சீலை:
இலங்கை கதிர்காமம் முருகன் கோயில் கொழும்பிலிருந்து 230 கி.மீ., தூரத்தில் உள்ளது. இவர் "கதிரேசன் என்று போற்றப்படுகிறார்.
கருவறையில் எந்த வடிவில் முருகன் இருக்கிறார் என்பது ரகசியமாக உள்ளது. சந்நிதியின் கதவில் தொங்கவிடப்பட்டிருக்கும் திரையில் மயில் மீது வள்ளி, தேவசேனாவுடன் அமர்ந்திருக்கும் முருகனின் உருவம் இருக்கும். இதைப்போன்று வேறு திரைச்சீலைகளும் தொங்கவிடப்பட்டிருக்கும். இந்த திரைக்கே பூஜை நடத்தப்படுகிறது. இங்கு ஆடிஅமாவாசையன்று ஆரம்பித்து பவுர்ணமியில் முடியும் விழா பிரபலமானது. விழாவின் போது யானைமீது, முருகனுக்குரிய யந்திரம் அடங்கிய ஒரு பெட்டி எடுத்து வரப்படும். இதை முருகனாகக் கருதி மக்கள் வழிபடுகின்றன். இக்கோயிலின் பின்புறமிருக்கும் அரசமரத்தை சிங்களர்கள் வழிபடுகின்றனர். தமிழ் மக்களும், சிங்களர்களும் இணைந்து வழிபடும் கோயில் இது. கிரகபாதிப்பை போக்கும் பாடல்: ராசிபலனை தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் விருப்பம் அதிகம். நம் பூர்வஜென்ம பாவபுண்ணியங்களுக்குத் தகுந்தபடி வாழ்க்கை அமைகிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராசி மண்டலத்தில் அசுவினி முதலாக ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. பிறந்த நட்சத்திரத்தைப் பொறுத்து ராசி அமைகிறது. அருணகிரிநாதர் "கந்தர் அலங்காரம் என்னும் நூலில், நட்சத்திர நாயகனான முருகனை வழிபாடு செய்யும் அன்பர்களை நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்று உறுதிபடக் கூறுகிறார்.""நாள் என்செயும் வினைதான் என்செயும்எனை நாடிவந்த கோள்என் செயும்கொடுங்கூற்றென் செயும், குமரேசர்இரு தாளும் (இரண்டு பாதங்கள்), சிலம்பும் (இரண்டு சிலம்பணிகள்),சதங்கையும் (இரண்டு சலங்கையும்),தண்டையும் (இரண்டு தண்டைகள்),சண்முகமும் (ஆறு முகங்கள்)தோளும் (12 தோள்கள்)கடம்பும் (கழுத்திலுள்ள கடம்பு மாலை)எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. முருகனின் 27 உறுப்புகளும் 27 நட்சத்திரங்களைக் குறிக்கின்றன. இதைப் பாடினால் கிரக பாதிப்பு நீங்கும்.நோய் தீர்க்கும் சந்தனம்: அழகே உருவான முருகப்பெருமானுக்கு, சூரபத்மனுடன் போரிட்ட போது மார்பில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்துடன் அவர் அமர்ந்துள்ள தலம் திருத்தணி. சூரனுடன் போரிட்ட கோபம் தணித்த இடம் என்பதால் "தணிகை என இத்தலம் பெயர் பெற்றது. அவரது காயத்தின் வலி குறைய சுவாமிக்கு சந்தன அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. அந்த சந்தனமே இங்கு பிரசாதமாக தரப்படுகிறது. அது நோய் தீர்க்கும் எனும் நம்பிக்கையுடன் பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். சந்தனம் அரைப்பதற்காக கோயிலில் கல் ஒன்றும் உள்ளது.திருப்புகழின் பொருள்: முருகனின் சிறப்புகளையும், அவரது அருள் வேண்டியும் அருணகிரிநாதர் பாடிய பாடல்களின் தொகுப்பே திருப்புகழ், இதன் முதல் அடியை முருகனே எடுத்துக் கொடுத்தார். "திரு என்றால் "அழகு, ஐஸ்வர்யம் என்று பொருள். அழகனாகிய, ஐஸ்வர்யம் தருகின்ற முருகனை புகழ்வதால், "திருப்புகழ் என்று பெயர் உண்டானது.அறுபடை வீடுகள்:திருப்பரங்குன்றம்,
~ சாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக