தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 டிசம்பர், 2013

ஜாமா!


இலங்கை, ஊரெழு மேற்கு பொக்கனை சுண்னாகத்தில் அமைந்துள்ள வரலாற்று சான்றுமிக்க ஒரு இடம் தான் ஜாமா.
இது எப்போது உருவானது என்பது பற்றி தகவல்களை அறிய முடியவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.
இங்கு காணப்படும் ஜாமாவின் சிறப்பம்சம் என்னவெனில்,

ராமரும் சீதையும் இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டனர் அவ் வேளையில் ராமருக்கு தாகம் ஏற்பட்டதும் நிலாவரையில் அமைந்துள்ள தொட்டியில் தண்ணீர் பருகி தனது தாகத்தினை தீர்த்துக் கொண்டார் என கூறப்படுகிறது

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊரெழுக்கிராமத்தை அடைந்தனர். அப்போது சீதைக்கு தாகம் ஏற்பட்டது சீதையின் தாகத்தினை தீர்ப்பதற்காக ராமர் அருகில் இருந்த ஜாமாவுக்கு சென்று தன்னுடைய வில்லை ஊன்றி தண்ணீரை எடுத்து சீதையின் தாகத்தினை தீர்த்தார் பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்
இராமர் வில் ஊன்றி தண்ணீர் எடுக்கும் போது இராமருடைய பெருவிரல் அடையாளமும் முளங்கால் அடையாளமும் தரையில் பதிந்து காணப்படுகிறது (வலக்காலை முளங்கால் படுமாறும் இடது காலை பாதம் படுமாறும் ஊன்றி தண்ணீரை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது
siri raja

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக