சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன ஷிமாவ்
நகரத்தை 1976-ம் ஆண்டு அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
மஞ்சள் நதிக்கரையில் புதைந்துபோன இந்நகரத்தை
தோண்டும் மேற்கொள்ளப்பட்டது. அதில் இந்த நகரமானது கற்காலத்தின் போது கட்டப்பட்ட
மிகப்பெரிய நகரம் என்பதை கடந்த ஆண்டு அவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில், அழிந்துபோன இந்த நகரத்தின் கிழக்கு
வாயிலின் முன்பு இரண்டு குழிகள் இருந்ததை கண்டனர். அதில் ஒரு குழிக்கு 24 மண்டை
ஓடுகள் என மொத்தம் 48 பெண்களின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. அடுத்து கிழக்கு
பகுதி சுவரின் அருகே இருந்த மற்றொரு குழியில் இருந்து மேலும் 32 பெண்களின் மண்டை
ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இவை பெரும்பாலும் இளம் பெண்களின் மண்டை ஓடுகள் என்று
கூறப்படுகிறது.
இந்த பெண்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்த வேறொரு
குழுவையோ அல்லது மதத்தையோ சேர்ந்த அடிமைகளாக இருந்து இருக்கலாம். பின்பு அந்த
கற்கால நகரம் கட்டப்படுவதற்கு முன்பு மதச்சடங்கு படி அவர்கள்
பலியிடப்பட்டிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த கண்டுபிடிப்பானது, மஞ்சள் நதிக்கரையில்
ஆதிகாலத்தில் வாழ்ந்த மக்களின் மதசிந்தனை, கட்டுமான திட்டங்கள், கலாச்சார
பழக்கவழக்கங்களை தெரிந்துகொள்ள பெரிதும் உதவும் என்றும் அவர்கள் கூறினர்.
http://kathiravan.com/newsview.php?mid=35&id=22013
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக