தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 4 நவம்பர், 2012

பூமிக்கு அடியில் ஓடும் மிகப்பெரிய ஆறு!!!


பூமிக்கு அடியில் ஓடும் மிகப்பெரிய ஆறு!!!

பிரேசில் நாட்டில் புகழ்பெற்ற அமேசான் காடு உள்ளது. கடந்த 1970-ம் ஆண்டு இங்கு பெட்ரோல் இருப்பதை கண்டறிய 241 இடங்களில் மிக ஆழமாக துளையிட்டனர். அப்போது, அதிலிருந்து பல தரப்பட்ட தட்பவெப்பநிலை வெளிப்பட்டது. இதைதொடர்ந்து இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் டாக்டர் வாலியா ஹம்சா என்பவர் தலைமையில் வானிலை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அமேசான் நாட்டில
் 13 ஆயிரம் அடி ஆழத்தில் பூமிக்கு அடியில் மிகப்பெரிய ஆறு ஓடுவதாக கண்டறிந்தனர். இந்த நதி 6 ஆயிரம் கி.மீட்டர் நீளமுள்ளது. அமேசான் காட்டின் பரப்பளவு கொண்டது என்றும் அறிந்தனர். இந்த நதிக்கு ஹம்சா என பெயரிட்டுள்ளனர். இந்த ஹம்சா நதி ஏக்ரே என்ற இடத்தில் உற்பத்தி ஆகி போஷ்டோ அமேஷானால் என்ற இடத்தில் உள்ள கடலில் கலக்கிறது. அது கோலிமோல், அமேஷோனா மற்றும் மராஜோ ஆகிய இடங்கள் வழியாக ஓடுவதும் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை கடந்த 40 ஆண்டுகளாக மேற்கொண்ட விஞ்ஞானிகள் தற்போதுதான் ஆறு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். வருகிற 2014-ம் ஆண்டிற்குள் அதுபற்றிய முழுமையான விவரங்களை ஆய்வின் மூலம் கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளனர்
 — 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக