தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 8 நவம்பர், 2012

அறிஞர் வீரமாமுனிவர் பிறந்த தினம் (08-11-1680)


இவரால்த்தான் நமது பழந்தமிழை வாசிக்க மொழிபெயர்ப்பாளர்கள் இன்று தேவைப்படுகின்றனர்!!!!

இத்தாலிய நாட்டைச் சேர்ந்த, தமிழுக்கு தொண்டாற்றிய அறிஞர் வீரமாமுனிவர் பிறந்த தினம் (08-11-1680)

"வீரமாமுனிவர் காலம் வரை தமிழில் எகர ஒகர உயிர் எழுத்துக்களின் மேலும் உயிர்மெய் எழுத்துகளின் மேலும் குறில் ஒசைக்குப் புள்ளி வைத்துக்கொண்டிருந்தார்கள். அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள்.

உதாரணம்: கெ,பெ,செ. இவைகள் புள்ளி வைத்ததால் குற்றெழுத்துக்கள். கெ,பெ,செ எனப் புள்ளி வைக்காமல் எழுதப்ப
ட்டால் அவை நெட்டெழுத்துக்கள்.கே, பே,சே என்று உச்சரிக்கப்பட்டன.

இதனால் வரும் குழப்பங்களை அவர்களே சிலேடைப் பாட்டுக்களாக இயற்றினார்கள். (ஒதி என்றால் ஒதிய மரம். ஓதி என்றால் கூந்தல். எரி என்றால் நெருப்பு.ஏரி என்றால் ஏரி..)

தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்தப் பழைய முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் ( கே ,பே ) வழக்கத்தை உண்டாக்கினார். இது தெளிவான சீர்திருத்தம்" -சுஜாதா

திருக்குறளில் அறத்துப்பாலையும்,பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர்.

இவரின் இயற்பெயர் Constantine Joesph Beschi. தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாக வீரமாமுனிவர் என பெயர் மாற்றிக் கொண்டவர்.

கிறித்தவ சமயத்தை பரப்ப தமிழகம் வந்து, தமிழின் சிறப்பினால் ஈர்க்கப்பட்டு, தமிழ்த் தொண்டராகவும் தமிழறிஞராகவும் மாறிய வீரமாமுனிவர் “நான் இறந்தபிறகு எனது கல்லறையில் நான் ஒரு தமிழன்’’ என்று பொறிக்கவும் என்று குறிப்பெழுதினாராம்.







இவரால்த்தான் நமது பழந்தமிழை வாசிக்க மொழிபெயர்ப்பாளர்கள் இன்று தேவைப்படுகின்றனரா???அதுதான் கல்வெட்டுக்களில் உள்ள ,கோயில்களில் உள்ள தமிழை எம்மால் வாசிக்க முடிவதில்லை ,இதுவும் தமிழை அழிக்கும் முயற்சியின் ஒருபடிதானே,அப்படியெனில் இவர் தமிழின் எதிரி அல்லவா!!!அப்போ முதல் தமிழ் எதிரி ஒரு இத்தாலியரா!!??



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக