தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 நவம்பர், 2012

நாடார்கள்

புகழ்பெற்ற நாடார்கள்திரு. கே. காமராஜ் நாடார் - பெருந்தலைவர், கர்மவீரர், காட்சிக்கு எளிமை ஆட்சியில் தூய்மை, கிங்மேக்கர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர், தமிழக முதல்வர், மாமனிதர், சுதந்திர போராட்ட வீரர்.

திரு. டபிள்யு.பி.சி சௌந்திரபாண்டியன் நாடார் - முதல் நாடார் சட்டமன்ற உறுப்பினர். பெருவணிகர், சுயமரியாதை இயக்க தலைவர், நீதிக்கட்சி தலைவர். நாடார் மகாஜன சங்க சிறந்த தலைவர். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி உருவாக காரணமாக இருந்தவர். பிற மாநில நாடார்களையும் சங்கத்தில் சேர்த்து ஒற்றுமையில் புரட்சி செய்தவர்.

திரு. நேசமணி நாடார் - குமரிதாய் தமிழகத்துடன் இணைய போராடி வெற்றி கண்ட குமரி தந்தை நாயர்கள், வெள்ளாளர்கள் கொடுமையில் இருந்து நாடார்களை காத்தவர். நாடார் மக்களுக்காக கட்சி ஆரம்பித்து சுமார் 20 சட்டமன்ற உறுப்பினர்களும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சிக்கு பெற்றவர். மிகச்சிறந்த வழக்கறிஞர். காமராஜர் முதல்வர் ஆனதும் கட்சியை கலைத்து காங்கிரசில் இணைந்தார்

திரு.மா.போ.சிவஞானம் - மிகச்சிறந்த தமிழ் அறிஞர், எழுத்தாளர், பேச்சாளர்.சுதந்திரபோராட்டவீரர்.திருத்தணியை தமிழகத்துடன்இணைக்கபாடுபட்டவர்.

திரு.சி.பா.ஆதித்தனார் - செய்தி துறையில், பத்திரிக்கை துறையில் மாபெரும் புரட்சி செய்தவர். தினத்தந்தி நிறுவனர். மாபெரும் சட்ட மேதை. நாம் தமிழர் கட்சி நிறுவனர். தமிழக சட்டமன்ற சபாநாயகராகவும், அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

திரு. கே.டி.கே. தங்கமணி - மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சட்ட மாமேதை

திரு சங்கரலிங்க நாடார் - மொழிப்போராட்ட தியாகி

திரு. கே.டி.கோசல்ராம் - காங்கிரஸ் பேரியக்க தலைவர்.

மணிமுத்தாறு கண்ட நாயகன் திரு கராத்தே செல்வின் நாடார் - ஆதித்தனார் காமராயர் கழக நிறுவனர், இளைஞர்களை ஒன்றிணைத்து ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடி வெற்றி கண்டவர் இனப்போராட்ட தியாகி;.

திரு.என்.வெங்கடேஷ பண்ணையார் - அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர். இந்திய அரசின் அணுசக்தி துறைக்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தை அளித்தவர். இந்தியா முழுவதும் உள்ள நாடார்களை ஒன்றிணைக்க பாடுபட்டவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக