முட்டாள் பெயர்க்காரணம் என்ன...?
அந்த காலத்தில் கோயில்களில் சப்பரம்
தூக்குவதற்கு என்று சிலபேர் இருப்பார்கள் .
அவர்களுக்கு கோயில் சாப்பாடு உண்டு .
—அந்த காலத்தில் கோயில்களில் சப்பரம்
தூக்குவதற்கு என்று சிலபேர் இருப்பார்கள் .
அவர்களுக்கு கோயில் சாப்பாடு உண்டு .
தங்க இடம் உண்டு .சப்பரம் தூக்கி கொண்டு
போகும் போது இடை இடையே சப்பரம்
மக்கள் தரிசனம் செய்ய சற்று நேரம் நிக்கும் .
அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு
எடுப்பதற்காக, சிலபேர் முட்டு எடுத்துக்கொண்டு
கூடவே வருவார்கள்.அவர்கள் சப்பரம்
நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை
நிப்பாட்டுவார்கள்.அதனால் அவர்களுக்கு
முட்டாள் என்று பெயர் சொல்லி அழைப்பார்கள்.
அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது.
அதிலிருந்து யார் ஒருவர் யோசிக்க தெரியாமல்
ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை
"முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.
போகும் போது இடை இடையே சப்பரம்
மக்கள் தரிசனம் செய்ய சற்று நேரம் நிக்கும் .
அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு
எடுப்பதற்காக, சிலபேர் முட்டு எடுத்துக்கொண்டு
கூடவே வருவார்கள்.அவர்கள் சப்பரம்
நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை
நிப்பாட்டுவார்கள்.அதனால் அவர்களுக்கு
முட்டாள் என்று பெயர் சொல்லி அழைப்பார்கள்.
அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது.
அதிலிருந்து யார் ஒருவர் யோசிக்க தெரியாமல்
ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை
"முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.
மிகவும் தவறான விளக்கம்! இதை முதலில் யார் எழுதினாரோ தெரியவில்லை; வலைப்பூக்கள், மடலாடற் குழுக்கள், சமூக ஊடகங்கள் என இணையத்தில் எங்கு பார்த்தாலும் இந்த விளக்கம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பதிலளிநீக்கு‘மூடம்’ எனும் சொல் நாம் அனைவரும் கேள்விப்பட்டதே. இதை வேர்ச் சொல்லாகக் கொண்டு எழுந்ததே ’முட்டாள்’ எனும் சொல். மூடத்தனம் கொண்ட ஆள் ’முட்டாள்’ அவ்வளவுதான். வேர்ச்சொல் என்றால் என்ன, ஒரு சொல்லை முறையாக எப்படிப் பிரித்தறிய வேண்டும் என்பவையெல்லாம் தெரியாமல் சொல்லாராய்ச்சியில் இறங்குவது மிகவும் தவறு! தவிர, தனக்கு ஒரு கருத்துத் தோன்றினால் அதற்குச் சப்பைக்கட்டாகத் தானே ஒரு கதையையும் உருவாக்கி உலவ விடுவது பொறுக்க முடியாத குற்றம்!
இப்படிப்பட்ட ஆர்வக்கோளாறுகளின் எண்ணிக்கை அண்மைக்காலமாக உயர்ந்து வருவதால், புகழ் பெற்ற தமிழறிஞர்களாக அறியப்பட்டவர்கள் தவிர வேறு யாருடைய இலக்கண - இலக்கிய - வரலாற்று விளக்கங்களையும் நம்பவோ பரப்பவோ வேண்டா எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! உடனடியாக இத்தகவலை அழிக்குமாறு எழுதியவரை வேண்டுகிறேன்!