தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 4 நவம்பர், 2012

நல்ல எண்ணங்களை பெறுவோம்[முயற்சியும் தேவை]


நல்ல எண்ணங்களை பெறுவோம்[முயற்சியும் தேவை]

* பக்தி ஒளி இருக்கும் மனதில் அறியாமை என்னும் இருள் இருப்பதில்லை. பதவி சாதிக்க முடியாததைக் கூட பக்தியால் சாதிக்க முடியும்.
* பிறருடைய குற்றங்குறைகளை மன்னிப்பவன் மனிதன். அதே சமயத்தில் பிறர் குறைகளை மறந்துவிடுபவன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்கிறான்.
* பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதே உண்மையான விரதம். பிறருக்குத் தீமை செய்யாத எந்தத் தொழிலும் உயர்வானதாகும்.
* பேராசை குணம் மக்களின் வாழ்க்கையை திசை திருப்பத் தொடங்கினால், அதன் பிடியில் சிக்கி தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்வர்.
* கடவுளுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்ப கட்டம். ஞானம் முதிரும் போது பயம் அன்பாக மாறுகிறது. பூரண அன்பு நம் மனதில் பரிணமிக்கும் போது, பயம் முற்றிலுமாக நம்மை விட்டு நீங்கிவிடுகிறது.
* புலன்களின் ஆதிக்கத்தில் அடங்கி நடக்கும் வாழ்க்கை உலக சம்பந்தமானது. புலன்களை நம் ஆதிக்கத்தில் கொண்டுவந்து அடக்கி வாழும் வாழ்க்கை ஆன்மிக சம்பந்தமானது.
* நல்ல எண்ணங்கள் நல்ல மனிதனை உருவாக்குகின்றன. கெட்ட எண்ணங்கள் மனிதனையே அழித்து
விடுகின்றன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக