தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 நவம்பர், 2012

ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது!



உடல் பருமனானவர்கள் அதனை இளைக்க வைப்பதற்காக படாதபாடுபட்டுக்கொண்டிருக்கையில், ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது என அதிர்ச்சி குண்டை வீசுகிறார்கள் ஆய்வாளர்கள்!இன்றைய கணினி யுகத்தில் உடல் உழைப்பு
எவ்வளவுக்கு எவ்வளவு குறைந்து போகிறதோ அந்த அளவுக்கு மனிதர்களுக்கான உடல் பருமன் பிரச்னை அதிகரித்துக் கொண்டே போகிறது. 

முன்பெல்லாம் 40 வயதுகளில்தான் ஆண் மற்றும் பெண்களுக்கு உடல் பருமன், தொப்பை போன்ற பிரச்னைகள் தலை தூக்கின.ஆனால் இன்றோ 30களிலேயே இப்பிரச்னை மனிதர்களை பாடாய்படுத்துகிறது. அவ்வாறு உடல் பருமன் அடைந்தவர்கள், ஒருகட்டத்திற்கு பின்னர்தான் சுதாரித்துக்கொண்டு உடற்பயிற்சி, டயட் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு பின்னர் உடல் தனது பழைய நிலையை எட்டிவிடுவதாக பலர் கூறுவதன் அடிப்படையில்தான், உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் மேற்கூறிய உடற்பயிற்சி மற்றும் டயட் போன்றவற்றை பின்பற்ற தொடங்குகிறார்கள். 

ஆனால் இவ்வாறு உடற்பயிற்சி மற்றும் டயட் போன்றவற்றினால் உடல் எடை குறைந்து ஒல்லியானாலும், ஏறக்குறைய ஓராண்டுக்குள் உடல் மீண்டும் பருமன் ஆகிவிடுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. 


சுமார் 25,000 பேர்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்விலேயே இது தெரியவந்துள்ளது. 1946 ஆம் ஆண்டில் பிறந்த 5,362 ஆண் மற்றும் பெண்களையும், 1958 ஆம் ஆண்டில் பிறந்த 20,000 பேர்களையும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தினர் விஞ்ஞானிகள். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உடல் எடை,ரத்த அழுத்தம் மற்றும் அவர்களது வாழ்க்கை நடைமுறை ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆய்வின் முடிவில் 1980 ஆம் ஆண்டுகளில் மேற்கூறிய இரு பிரிவினருமே உடல் பருமன் அடைந்த பின்னர் உடற்பயிற்சி மற்றும் டயட்டினால் ஒல்லியாகி,பிறகு மீண்டும் படிப்படியாக உடல் எடை அதிகரித்தது தெரியவந்தது. அதாவது ஒருவர் ஒருமுறை குண்டாகிவிட்டால், மீண்டும் ஒருபோதும் ஒல்லியாக முடியாது. இடையில் ஒல்லியானாலும் உடல் மீண்டும் பழைய பருமன் நிலைக்கே சென்றுவிடும். 

அதற்காக ஏற்கனவே உடல் பருமனாகிவிட்டவர்கள் டயட் இருப்பது, உடற் பயிற்சி செய்வது போன்றவற்றை கைவிட்டுவிட வேண்டாம்.குறைவாக மற்றும் கலோரி குறைந்த உணவுகளை உண்பது மற்றும் உடற் பயிற்சி போன்றவை உடல் மேலும் குண்டாகாமலும், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாலும் தடுக்கும் என்று கூறும் ஆய்வாளர்கள், இப்பிரச்னைக்கு உள்ள ஒரே தீர்வு,முன்கூட்டியே உடல் பருமனாகாமல் பார்த்துக்கொள்வதுதான் என்கிறார்கள்.
http://www.saanthai.com/2011/12/blog-post_07.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக