தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, November 28, 2018

பஞ்ச பூதங்களில் நீங்கள் யார்? உங்க ரேகையை வைத்து தெரிந்துகொள்ளுங்கள்..!


நமது எதிர்காலம் குறித்து அறிந்துக் கொள்ள பல ஜோதிட வகைகள் இருப்பினும், கைரேகை பார்ப்பதில் தான் சற்று ஆர்வம் அதிகமாக இருக்கும். நமது உள்ளங்கை ரேகையில் பல கோடுகள் இருக்கின்றன. இதில் ஒவ்வொன்றும் அந்த நபரின் ஆரோக்கியம், தனம், தொழில், பிள்ளை செல்வம், ஆயுள் என ஒவ்வொன்றை குறிப்பதாய் அறியப்படுகிறது.
நமது கைரேகை வடிவத்தை வைத்து அதை ஒருசில வகையாக பிரிக்கின்றனர். குறிப்பாக இதில் பஞ்சபூத வகை வைத்து நெருப்பு, பூமி, நீர், காற்று என பிரிக்கும் வகையும் இருக்கிறது. இந்த பிரிவுகளில் கைரேகை அமைந்திருக்கும் நபர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என இனிக் காணலாம்...
நெருப்பு!

உங்கள் உள்ளங்கை ரேகை நெருப்பு வகையாக இருந்தால். நீங்கள் பிறப்பிலேயே தலைமை வகிக்கும் தன்மை கொண்டிருப்பீர்கள். செய்யும் எந்த காரியத்திலும் உங்களிடம் ஒரு ஆர்வம் தென்படும்.
நெருப்பின் சிறப்பு!
உங்கள் விரல்களின் நீளத்தை வைத்து நீங்கள் எந்தளவு பிடிவாத குணம் கொண்டவர் என கூற முடியும். நீங்கள் விளையாட்டு, மற்றும் உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பீர்கள்.
பூமி!

உங்கள் உள்ளங்கை ரேகை பூமி வகையை இருந்தால், நீங்கள் எதையும் பிராக்டிகலாக பார்க்கும் பண்பு கொண்டிருப்பீர்கள். பொறுமை அதிகமாக இருக்கும்.
பூமியின் சிறப்பு!
அவசரப்படாமல் கூலாக எதையும் செய்ய விரும்புவீர்கள். பூமி என்ற சொல்லுக்கு ஏற்ப பொறுமையும், சின்ன சின்ன விஷயங்களையும் ரசித்து செய்வீர்கள்.
காற்று!

உங்கள் உள்ளங்கை ரேகை காற்று வகையாக இருந்தால், நீங்கள் மிகவும் ஷார்ப்பாக இருப்பீர்கள். மற்றவருடன் பேசும் போது கலந்தாய்வு செய்து தான் பேசுவீர்கள்.
காற்றின் சிறப்பு!
உங்கள் கேரியரை புத்திசாலித்தனமாக நகர்த்தி செல்வீர்கள். உங்கள் புத்திக்கூர்மை மற்றும் மிகவும் ஆராய்ந்து செய்யும் அந்த செயல்களே கூட சில சமயங்களில் உங்களுக்கு தடையாக அமையலாம்.
நீர்!

உங்கள் உள்ளங்கை ரேகை நீர் வகையாக இருந்தால், நீங்கள் ஆன்மீக நம்பிக்கை அதிகம் கொண்டிருப்பீர்கள், உங்களிடம் அதிகமாக கிரியேட்டிவிட்டி இருக்கும். மனப்பூர்வமாக எதையும் செய்வீர்கள்.
நீரின் சிறப்பு!
இசை, பாடல், ஓவியம் போன்றவற்றில் திறன் கொண்டு இருப்பீர்கள். சமூகம் தனக்கு கொடுத்ததை திருப்பி சமூகத்திற்கே கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உணர்வு ரீதியாக பெரும் பிணைப்பு கொண்டிருப்பீர்கள்.

https://www.manithan.com/astrology/04/196696

No comments:

Post a Comment