5000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதனின் குரல் குறித்து ஆடியோ ஒன்றை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
அதாவது, 25 ஆண்டுகளுக்கு முன்பு டைசென்ஜாக் சிகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 5000 வருடங்களுக்கு முன்பு இறந்த மனிதனின் குரல் தான் இது. இதை சுற்றுலா சென்ற ஜேர்மனி வாசிகள் ஊட்ஸல் என்ற இடத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
ஊட்ஸஸ் பகுதியில் இந்த மம்மி கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு விஞ்ஞானிகள் ஊட்சி என பெயர் வைத்துள்ளனர்.
மேலும், குறித்த மம்மி பனிமலையில் இருந்த காரணத்தினால், 90 சதவீத உடல் அப்படியே இருந்துள்ளது.
இந்நிலையில், குறித்த உடலை வைத்து பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு பலவற்றை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள், கம்ப்யூட்டர் மூலம் ஊட்சியின் முழு உருவத்தையும் வடிவமைத்து அவரைப்போன்ற மெழுகுச்சிலையையும் உருவாக்கியுள்ளனர்.
இந்நிலையில், டிஸ்கவரி சேனலின் தொல்லியல் துறை பொறுப்பாளரான ரோசல்லா லோரன்ஸி என்பவர் இந்த வீடியோவினை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக