தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, November 23, 2018

இந்த குணங்களில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு லட்சுமிதேவியின் பலன்கள் கிடைக்காது!...

செல்வம் மற்றும் வளத்தின் கடவுளாக இந்து மக்களால் பூஜிக்கப்படுபவர் லக்ஷ்மிதேவி. ஒருவர் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டுமெனில் அவர்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருள் மிகவும் முக்கியமானதாகும். லக்ஷ்மி தேவியின் அருள் ஒருவருக்கு கிடைக்க வேண்டுமெனில் அதற்கு நீங்கள் நிறைய முயற்சிகளும், வழிபாடுகளும் செய்ய வேண்டும்.
உங்கள் மனதின் தூய்மையை பொறுத்தே உங்கள் வாழ்வில் செல்வத்தின் அளவு நிர்ணயிக்கப்படும் என்று வேதங்கள் கூறுகிறது. அதனால் உங்கள் மனதில் இருக்கும் தீய எண்ணங்களை அழித்தால் மட்டுமே உங்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருள் பூரணமாக கிடைக்கும். மேலும் சில மந்திரங்கள் மூலமும் லக்ஷ்மியின் அருளை பெறலாம். இந்த பதிவில் எந்த குணம் உள்ளவர்களுக்கெல்லாம் லக்ஷ்மியின் அருள் கிடைக்காது என்றும் லக்ஷ்மிதேவியை வழிபட வேண்டிய மந்திரம் எண்ணவேண்டும் பார்க்கலாம்.
காமம்
எந்த ஒரு இடத்திலும், சூழ்நிலையிலும் காமமானது மேலோங்கி வாழ்க்கை நெறிகளும், தர்மமும் நிராகரிக்கப்படுமெனில் அந்த இடத்திற்கு லக்ஷ்மி தேவி ஒரு போதும் வரமாட்டார். ஒருவேளை அவரின் அருள் இருந்தாலும் அதற்கு பின் அது கிடைக்காது. அவர்கள் வாழ்வில் நிம்மதியிழந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும்.
ஈகோ
ஒரு தனிநபரிடமோ அல்லது இல்லத்திலோ அடாவடித்தனமும், பிடிவாதமும் தான்தான் என்ற கர்வமும் இருப்பின் அவர்களிடம் மனசாட்சி என்பது இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கும், அவர்களின் இல்லத்திற்கும் ஒருபோதும் லக்ஷ்மிதேவியின் அருள் கிடைக்காது.
பேராசை
லக்ஷ்மி தேவி எப்பொழுதும் பேராசை அதிகம் உள்ளவர்களிடமோ அல்லது வீட்டிலோ இருக்க விரும்பமாட்டார். ஏனெனில் அவர்களுக்கு கடைபிடிக்கவேண்டிய தர்மத்தை காட்டிலும் பேராசையே பெரிதாக இருக்கும். வேதங்கள் கூறுவது என்னவெனில் பேராசை என்பது நரகத்திற்கான வாசலாகும்.
வன்முறை
அப்பாவி மிருகங்களையும், மனிதர்களையும் தங்களின் பொழுதுபோக்கிற்காகவும், சுயலாபத்திற்காகவும் மதரீதியாக துன்புறுத்தும் இடத்திலும் சரி மக்களிடமும் சரி லக்ஷ்மி தேவி ஒருபோதும் இருக்கமாட்டார். அவர்களுக்கு லக்ஷ்மிதேவியின் அருள் என்பது எப்பொழுதும் கிடைக்காது.
பெண்ணை அவமதித்தல்
பெண்ணிற்குண்டான மரியாதை தராத இடம், பெண்ணை இகழ்வது, கொடுமைப்படுத்துவது போன்ற இடங்களில் லக்ஷ்மி தேவி வசிக்க விரும்பமாட்டார். மேலும் அப்படிப்பட்டவர்கள் லக்ஷ்மிதேவியின் சாபத்திற்கு ஆளாகவேண்டிவரும்.

https://www.manithan.com/spiritual/04/196023?ref=rightsidebar-lankasrinews

No comments:

Post a Comment