ஜோதிர்லிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எந்த வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும் உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியை துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக ஜோதிர்லிங்கத்தை காண்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் உள்ளன. அவற்றில் மத்திய பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா 2 கோயில்கள் அமைந்துள்ளன. எஞ்சியுள்ள 6 ஜோதிர்லிங்க கோயில்கள் தமிழ்நாடு, ஜார்கண்ட், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஆந்திர பிரதேசம், குஜராத் மாநிலங்களில் அமைந்துள்ளன. சிவபெருமான் மனிதர்களை நேரிடையாகச் சந்திக்கும் இடங்கள் இவைதானாம்!
காசி விஸ்வநாதர் கோயில், உத்தரப்பிரதேசம்
காசி விஸ்வநாதர் கோயில் இந்துக்களின் புனித நகரமாக கருதப்படும் வாரணாசியில் கங்கை நதியின் மேற்கு கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலின் மூலவர் பெயரான விஸ்வநாதர் என்பதற்கு அகிலத்தை ஆள்பவர் என்று பொருளாகும். 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமாக அறியப்படும் காசியின் (வாரணாசி) பெயராலேயே இக்கோயில் காசி விஸ்வநாதர் கோயில் என்று அழைகப்படுகிறது. மேலும் சிவன் கோயில்களிலே இதுதான் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.
சோம்நாத் கோயில்
சோம்நாத் கோயில் குஜராத் மாநிலம் சௌராஷ்டிரா பகுதியில் சோம்நாத் கோயில் அமைந்திருக்கிறது. ஜோதிர்லிங்க யாத்திரை செல்வோர் முதலில் தரிசக்க வேண்டிய ஸ்தலமாக சோம்நாத் கோயில் கருதப்படுகிறது. இந்த சோம்நாத் கோயில் அமைந்திருக்கும் சோம்நாத் கடற்கரையிலிருந்து கடலுக்கு அப்பால் உள்ள அண்டார்டிகா கண்டம் வரைக்கும் இடையே எந்த நிலப்பகுதியும் இல்லை என்று கடற்பாதுகாப்பு சுவரில் உள்ள பான ஸ்தம்பத்தின் கல்வெட்டு கூறுகிறது. மேலும் இந்த சோம்நாத் கோயில் 16 முறை அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மஹாகாலேஷ்வர் ஆலயம்
மஹாகாலேஷ்வர் ஆலயம், மத்திய பிரதேசம் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் அமைந்திருக்கும் மஹாகாலேஷ்வர் கோயில் ருத்திர சாகர் என்னும் ஏரிக்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும். 12 ஜோதிர்லிங்க கோயில்களில் மஹாகாலேஷ்வர் ஆலயத்தில் உள்ள லிங்கம் மட்டும்தான் தானாக உருவான சுயம்பு லிங்கம் என்று நம்பப்படுகிறது. மேலும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் மஹாகாலேஷ்வர் மட்டுமே தெற்கு நோக்கி அமையப்பெற்றிருக்கிறது.
ஓங்காரேஸ்வரர் கோயில், மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்தில் நர்மதை ஆற்றில் உள்ள சிவபுரி அல்லது மாண்டாத்தா எனும் தீவு ஒன்றில் ஓங்காரேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோயில் அமையப்பெற்றுள்ள தீவின் வடிவத்தை 'ஓம்' என்பதுடன் இந்துக்கள் ஒப்பிட்டுக் காண்கிறார்கள். மேலும் இந்த தீவில் ஜோதிர்லிங்க கோயிலான ஓங்காரேஸ்வரர் கோயிலை போலவே அமரேஸ்வரர் கோயில் என்ற மற்றொரு ஆலயமும் அமையப்பெற்றுள்ளது.
பீமாஷங்கர் கோயில், மகாராஷ்டிரா
பீமாசங்கர் கோயில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து 110 கிமீ தொலைவில் உள்ள போர்கிரி எனும் ஊரில் சஹயாத்திரி குன்றுகளின் மீது அமைந்துள்ளது. இந்த கோயில் தொன்மையான மற்றும் நவீன கட்டிடக்கலை பாணிகளின் கலவையில் காட்சியளிக்கிறது. இந்த ஜோதிர்லிங்க ஆலயம் ஆன்மீக யாத்ரீகர்களிடையே மட்டுமல்லாமல் இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்கள் மற்றும் மலையேற்ற விரும்பிகள் மத்தியிலும் பிரபலமாக திகழ்கிறது.
திரிம்பகேஷ்வர், மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவின் நாசிக் நகரிலிருந்து 28 கிமீ தொலைவில் திரிம்பாக் என்னும் நகரில் திரிம்பகேஷ்வர் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டு அழகிய சிற்பங்களுடன் காட்சியளிக்கிறது
பைத்யநாத் தாம், ஜார்கண்ட்
இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பைத்யநாத் கோவில் ஜார்கண்டின் தியோகர் நகரத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆனி மாதத்தில் சுல்தான்கஞ்ச் என்னும் இடத்திலிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு 100 கிலோமீட்டர்கள் தூரம் வரை கால்நடையாக இக்கோயிலுக்கு வருகிறார்கள். சிலர் இந்த தூரத்தை 24 மணி நேரத்தில் கடந்து விடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
https://www.jvpnews.com/srilanka/04/195896
கேதார்நாத் கோயில், உத்தரகண்ட்
உத்தரகண்ட் மாநிலத்தின் பனிபடர்ந்த இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் கேதார்நாத் கோயில் அமைந்திருகிறது. இந்த கோயிலே 12 ஜோதிர்லிங்க கோயில்களில் சிவனின் கைலாய மலைக்கு வெகு அருகில் அமைந்திருக்கும் கோயிலாக கருதப்படுகிறது. இப்பகுதியில் நிலவும் தீவிர காலநிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் முதல் தீபாவளி திருநாள் வரையே திறந்திருக்கும். அதோடு இக்கோயிலை சாலை வழியாக நேரடியாக அணுக முடியாது. கௌரிகுண்டம் என்ற இடத்திலிருந்து 14 கிமீ தூரம் மலை ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும்.காசி விஸ்வநாதர் கோயில் இந்துக்களின் புனித நகரமாக கருதப்படும் வாரணாசியில் கங்கை நதியின் மேற்கு கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலின் மூலவர் பெயரான விஸ்வநாதர் என்பதற்கு அகிலத்தை ஆள்பவர் என்று பொருளாகும். 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரமாக அறியப்படும் காசியின் (வாரணாசி) பெயராலேயே இக்கோயில் காசி விஸ்வநாதர் கோயில் என்று அழைகப்படுகிறது. மேலும் சிவன் கோயில்களிலே இதுதான் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.
சோம்நாத் கோயில் குஜராத் மாநிலம் சௌராஷ்டிரா பகுதியில் சோம்நாத் கோயில் அமைந்திருக்கிறது. ஜோதிர்லிங்க யாத்திரை செல்வோர் முதலில் தரிசக்க வேண்டிய ஸ்தலமாக சோம்நாத் கோயில் கருதப்படுகிறது. இந்த சோம்நாத் கோயில் அமைந்திருக்கும் சோம்நாத் கடற்கரையிலிருந்து கடலுக்கு அப்பால் உள்ள அண்டார்டிகா கண்டம் வரைக்கும் இடையே எந்த நிலப்பகுதியும் இல்லை என்று கடற்பாதுகாப்பு சுவரில் உள்ள பான ஸ்தம்பத்தின் கல்வெட்டு கூறுகிறது. மேலும் இந்த சோம்நாத் கோயில் 16 முறை அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மஹாகாலேஷ்வர் ஆலயம், மத்திய பிரதேசம் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் அமைந்திருக்கும் மஹாகாலேஷ்வர் கோயில் ருத்திர சாகர் என்னும் ஏரிக்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும். 12 ஜோதிர்லிங்க கோயில்களில் மஹாகாலேஷ்வர் ஆலயத்தில் உள்ள லிங்கம் மட்டும்தான் தானாக உருவான சுயம்பு லிங்கம் என்று நம்பப்படுகிறது. மேலும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் மஹாகாலேஷ்வர் மட்டுமே தெற்கு நோக்கி அமையப்பெற்றிருக்கிறது.
ஓங்காரேஸ்வரர் கோயில், மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்தில் நர்மதை ஆற்றில் உள்ள சிவபுரி அல்லது மாண்டாத்தா எனும் தீவு ஒன்றில் ஓங்காரேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோயில் அமையப்பெற்றுள்ள தீவின் வடிவத்தை 'ஓம்' என்பதுடன் இந்துக்கள் ஒப்பிட்டுக் காண்கிறார்கள். மேலும் இந்த தீவில் ஜோதிர்லிங்க கோயிலான ஓங்காரேஸ்வரர் கோயிலை போலவே அமரேஸ்வரர் கோயில் என்ற மற்றொரு ஆலயமும் அமையப்பெற்றுள்ளது.
பீமாஷங்கர் கோயில், மகாராஷ்டிரா
பீமாசங்கர் கோயில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து 110 கிமீ தொலைவில் உள்ள போர்கிரி எனும் ஊரில் சஹயாத்திரி குன்றுகளின் மீது அமைந்துள்ளது. இந்த கோயில் தொன்மையான மற்றும் நவீன கட்டிடக்கலை பாணிகளின் கலவையில் காட்சியளிக்கிறது. இந்த ஜோதிர்லிங்க ஆலயம் ஆன்மீக யாத்ரீகர்களிடையே மட்டுமல்லாமல் இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்கள் மற்றும் மலையேற்ற விரும்பிகள் மத்தியிலும் பிரபலமாக திகழ்கிறது.
திரிம்பகேஷ்வர், மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவின் நாசிக் நகரிலிருந்து 28 கிமீ தொலைவில் திரிம்பாக் என்னும் நகரில் திரிம்பகேஷ்வர் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டு அழகிய சிற்பங்களுடன் காட்சியளிக்கிறது
பைத்யநாத் தாம், ஜார்கண்ட்
இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பைத்யநாத் கோவில் ஜார்கண்டின் தியோகர் நகரத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆனி மாதத்தில் சுல்தான்கஞ்ச் என்னும் இடத்திலிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு 100 கிலோமீட்டர்கள் தூரம் வரை கால்நடையாக இக்கோயிலுக்கு வருகிறார்கள். சிலர் இந்த தூரத்தை 24 மணி நேரத்தில் கடந்து விடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
https://www.jvpnews.com/srilanka/04/195896
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக