தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 நவம்பர், 2018

ஆட்டுக்கறிக்கும் நாய்க்கறிக்கும் என்ன வித்தியாசம்? உடனே பகிருங்கள் !


கடந்த வாரம் சென்னை எலும்பூர் ரயில் நிலையத்தில் ஜோத்பூா எக்ஸ்பிரசிலிருந்து வந்த பார்சலில் இருந்து 1500 கிலோ (கிட்டதட்ட 1 டன்) நாய் கறி கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது நம் எல்லோருக்கும் தெரியும்.
சென்னையில் எங்கு பார்த்தாலும் தள்ளுவண்டி கடை முதல் ஸ்டார் ஹோட்டல் வரை பிரியாணி தான் நம்முடைய மக்களின் விருப்ப உணவாக இருந்தது.
இந்த நாய்க்கறி சர்ச்சைக்குப் பின், சென்னையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் பிரியாணி மற்றும் மட்டன் உணவு வகைகளை சாப்பிடுவதற்கு மக்கள் அச்சப்படுகிறார்கள்.
அதற்கான நாம் சாப்பிடாமலேயே இருக்க முடியாதல்லவா. சரி வெள்ளாட்டுக்கறிக்கும் நாய்க்கறிக்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிக்கலாம்.
எப்படி கண்டுபிடிப்பது?
  • வெள்ளாட்டின் கொழுப்பு நல்ல பால் நிறத்தில் வெண்மையாகவே இருக்கும். ஆனால் நாய்க்கறியின் கொழுப்பு சற்று மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
  • வெள்ளாடு சற்று வேகமாக வெந்துவிடும். ஆனால் நாய்க்கறி ஆடு மற்றும் மாட்டுக்கறியை விடவும் கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பதால் வேக நேரமெடுக்கிறது.
  • வெள்ளாட்டு இறைச்சி சற்றே இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தில் இருக்கும். ஆனால் நாய்க்கறியோ ரெட் மீட் வகையைச் சேர்ந்தது. மாட்டிறைச்சியைக் காட்டிலும் அடர்ந்த நிறமுடையது.
  • ஆட்டிறைச்சியில் எலும்புகள் வெந்ததும் மென்மையாகிவிடும். ஆனால் நாய்க்கறியில் எலும்புகள் நொறுங்காது. மிக உறுதியாக இருக்கும்.
  • அதேபோல் வாசனையில் நாய்க்கறியில் கொழுப்பு மிகுதி என்பதால் இறைச்சியின் மணம் மிக அதிகமாக இருக்கும். ஆனால் வெள்ளாட்டுக் கறியில் அந்த வெள்ளாட்டு ரோம வாசனையை சாப்பிட்டு விழுங்கும்போது உணர முடியும்.
  • இந்த வித்தியாசங்களை வைத்தே ஆட்டிறைச்சிக்கும் நாய்க்கறிக்குமான வித்தியாசங்களை நம்மால் கண்டுபிடித்துவிட முடியும்.
  • ஆட்டிறைச்சி வெந்ததும் லேசாக நிறம் மாறியிருக்கும். ஆனால் நாய்க்கறி பன்றி இறைச்சியைப் போன்று வெந்ததும் பிரௌன் கலருக்கு மாறிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக