தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, November 23, 2018

லிங்கோத்பவர்,அவருக்கான கார்த்திகை தீபநாள்!

இவர எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கா?

சிவாலயத்தில் நீங்கள் கண்டுகொள்ளாமல் நகரும்

இவருக்குத்தான் கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்க நினைக்கிறமாதிரி கார்த்திகை என்பது முருகனுக்கல்ல.

சிவாலயத்தை வளம்வரும்போது மூலவரின் கருவறைக்குப் பின்னால் மேற்கு நோக்கி இருப்பார்.

இவர்தான் லிங்கோத்பவர்.

ஒருமுறை விஷ்ணு பிரம்மா இருவரிடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சச்சரவு வரவே, இருவரும் சிவனிடம் சென்று தங்களில் யார் பெரியவர் என நீங்களே கூறுங்கள் எனக் கேட்க, அதற்கு அவர்

ஜோதி வடிவமாய் விண்ணுக்கும் மண்ணுக்கும் பிரம்மாண்டமாய் எழுந்துநின்று, தன்னுடைய அடியையும் முடியையும் முதலில் யார் கண்டுவருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவன் சொல்லிவிடுகிறார்.

விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து மண்ணைக் குடைந்து செல்கிறார்.
பல ஆண்டுகள் கழித்து தங்களின் அடியை என்னால் காண இயலவில்லை எனச் சிவனிடம் சொல்கிறார்.

அன்னப்பறவையாகி விண்ணுலகம் சென்ற பிரம்மா, பல ஆண்டுகள் கழித்து வழியில் ஒரு தாழம்பூவைக் காண்கிறார்.

நீ எங்கிருந்து வருகிறாய் என பிரம்மா தாழம்பூவிடம் கேட்க அதற்கு அந்தத் தாழம்பூ, நான் சிவனுடைய தலையிலிருந்து வருகிறேன் எனக்கூறியுள்ளது.

அவருடைய தலை இன்னும் எவ்வளவு தூரம்னு பிரம்மா கேட்க,
நானே நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழே வந்துகொண்டிருக்கிறேன் என பிரம்மாவை அதிரவைத்துவிட்டது தாழம்பூ!

நான் உன்னைத் தலையிலிருந்து எடுத்து வந்ததாக சிவனிடம் சொல் என பிரம்மா கட்டளையிட,

இருவரும் சிவனிடம் பொய்யுரைத்து மாட்டிக்கொள்கின்றனர்.

கோவம்கொண்ட சிவன்,
பிரம்மா உனக்கு பூலோகத்தில் பக்தர்களே இருக்கமாட்டார்கள்,
உனக்கு ஆலயங்களும் எங்கும் இருக்காது,
தாழம்பூ இனி உன்னை யாரும் பூஜைக்குப் பயன்படுத்தமாட்டார்கள் என இருவருக்கும் சாபமிடுகிறார்.

உண்மை உரைத்த விஷ்ணுவே
உனக்கு, எனக்கு நிகரான ஆலயங்கள் பூலோகத்தில் இருக்கும் என அவருக்கு ஆசியும் வழங்குகிறார்.

இந்த நிகழ்வு நடந்த இடம் திருவண்ணாமலை.

இறையனார் ஜோதி வடிவாக விஸ்வரூபம் எடுத்த நிகழ்வே கார்த்திகைத் திருநாள் எனக் கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்வை நடத்திய சிவபெருமான்தான் லிங்கோத்பவர் என வணங்கப்படுகிறார்.

பெரும்பாலும் மன்னர்கள் கட்டிய ஆலயங்கள் மட்டுமே லிங்கோத்பவர் வைத்து கட்டப்பட்டதாகச் சொல்வர்.

சிவாலயத்தில் லிங்கோத்பவர் இருக்க சில விதிமுறைகள் உண்டாம்.

புதிதாக கட்டப்பட்ட சிவாலயத்தில் லிங்கோத்பவர் இருப்பது அரிதே.

அதாவது லிங்கோத்பவர் இருக்கும் ஆலயங்கள் மிகப்பழமையான சிவாலயமாகும்.

சிவாலயம் சென்று வேண்டும்போது அது விரைவில் பலிக்க லிங்கோத்பவரிடமும் அதே வேண்டுதலைச் சொல்லவேண்டுமாம்.

அனைவருக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

#சம்போமகாதேவா

No comments:

Post a Comment