பாண்டியர், சேரர், சோழர் என்னும் முடியுடை மூவேந்தர்களுள் படைபலம் அதிகம் கொண்ட பாண்டியர் குலத்தில் பிறந்த அரசர்கள் அறமும் வீரமும் ஆற்றலும் மிக்கவர்கள்.
தமிழகத்தில் மத்தியில் ஆட்சியினை மேற்கொண்ட பாண்டியர்களின் தேசம் சோழ தேசத்திற்கு தெற்கிலும், சேரதேசத்திற்கு கிழக்கிலும், ஓர் அகன்று பரவி இருந்த தேசம் ஆகும். இந்த பாண்டியதேச பூமி மேற்கே உயரமாகவும், கிழக்கே சரிந்தும் காணப்படும்.
கடைசி பாண்டிய மன்னரால் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அமைந்துள்ளது ஆதி வழிவிடும் விநாயகர் ஆலயம் கட்டமைக்கப்பட்டுள்ளாக கூறப்படுகின்றது.
இந்த ஆலயம் இது சுமார் 7 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றது.
இக்கோலுக்கு என்று ஒரு புராணக்கதையொன்று கூறப்படுகின்றது. ஆதி வழிவிடும் விநாயகர் கோவில் இயற்கை சீற்றங்களால் முழுமையாகச் சிதிலமடைந்தது காணப்பட்ட வேளையில், காட்டு வழியாகக் கர்ப்பிணி பெண் ஒருவர் சென்றுகொண்டிருக்கையில் திடீரென வலி ஏற்பட்டுள்ளது.
அப்போது, அப்பெண்ணின் கண்முன் அரவது தாய் போன்ற தோற்றத்தில் தோன்றிய சிவன் பெண்ணிற்கு பிரசவம் செய்து காத்தார். இதனையறிந்த மக்கள் அந்த சிதிலமடைந்து காணப்பட்ட கோவிலை சீரமைத்தனர் என்று சொல்லப்படுகின்றது.
இதுமட்டுமின்றி இதுவே பாண்டியன் கட்டிய கடைசிக் கோவில் ஆகும்.
http://news.lankasri.com/special/03/175227?ref=ls_d_others
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக