தமிழ்நாடு மாநிலம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயில் 1000 வருடங்கள் பழமையானதாகும். இக்கோவிலில் பிரகதீஸ்வரர், பெரியநாயகி தாயாரோடு அருள் பாலிக்கிறார்.
மாசி சிவராத்திரி, ஐப்பசி மாதம் நிகழும் பௌர்ணமி, பங்குனித் திருவிழா மற்றும் திருவாதிரை ஆகிய நிகழ்வுகள் சிறப்பானதாக இக்கோவிலில் கொண்டாடப்படுகிறது.
இந்த கோவிலின் சிறப்பு என்றால் இங்கு அமைந்துள்ள நந்தி தான். இந்த நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் வைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து 200மீ தாண்டி மூலஸ்தானம் உள்ளது. இந்த நந்தி மீது பகலில் படும் ஒளி, அப்படியே உள்ளிருக்கும் தெய்வத்தின் மீது பிரதிபலிக்கிறது.
மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்குகளை அணைத்து விட்டாலும், வெளியில் இருக்கும் ஒளி பட்டு லிங்கம் ஒளிருகிற மாதிரி வடிவமைத்துள்ளார்கள்.
கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. கருவைறையில் சந்திரகாந்த கல்லால் செய்யப்பட்ட பீடத்தில் லிங்கம் அமைந்துள்ளது.
இது வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் கதகதப்பையும் தரும் சிறப்பு கொண்டது.
மேலும் இங்குள்ள நவக்கிரகங்கள் மற்ற கோயில்களைப் போல இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப் பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள சரஸ்வதி மற்றும் லட்சுமி தேவிகள், தியான கோலத்தில் காட்சியளிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு ஞான சரஸ்வதி, ஞான லட்சுமி என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
பங்குனி திருவிழா இங்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் 500 குடம் பால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
இக்கோவிலில் அர்ச்சனை செய்வதும், வேட்டி, மாலை, புடவை சாற்றி வழிபடுவதும் நேர்த்திக்கடனாக இருந்து வருகிறது.
http://news.lankasri.com/history/03/175110?ref=ls_d_others
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக