தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, March 22, 2018

4500 ஆண்டுகள் பழமையான மிகவும் தொன்மையான மொழி தமிழ்!!!


தமிழ் உட்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையான மொழி என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் மிகப் பழமையான மொழி தமிழ் தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும், டேராடூன் இந்திய வன உயிர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டனர்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
திராவிட மொழிகள் பூகோளரீதியா பரவிய காலம், அதன் உண்மையான பூர்வீகம் குறித்துத் தெளிவான காலம் இல்லை.
ஆனால், திராவிட மொழிக் குடும்பங்களுக்கு இந்திய துணைக் கண்டம் என்பது பூர்வீகம் என்ற கருத்தொற்றுமை ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகிறது.
இப்போதுள்ள நிலையைக் காட்டிலும், திராவிட மொழிகள் அந்த காலத்தில், மேற்கு திசையில் பரவலாகப் பரவி இருக்கலாம்.

அதன் அடிப்படையில் தெற்காசிய பகுதி 600 மொழிகளின் தாயகமாக விளங்கியுள்ளது. அவை திராவிடம், இந்தோ-ஐரோப்பா, சீனா-திபெத்தியம் உட்பட 6 மொழிக் குடும்பங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டன.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சுமார் 80 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழியை 22 கோடி மக்கள் தற்போது பேசுகின்றனர்.
இந்த 6 மொழி குடும்பங்களில் முதன்மையானதும், பழமையானதும் திராவிட மொழிக்குடும்பமே. இது சுமார் 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இதில் பழமையான மொழி தமிழ். சமஸ்கிருதம் போல் சிதைந்து போகாமல் தமிழ் மொழியின் கல்வெட்டுக்களும், காப்பியங்களும் தற்காலம் வரை காணக்கிடைக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://news.lankasri.com/special/03/174584?ref=ls_d_others

No comments:

Post a Comment