தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, April 1, 2018

வீட்ல இந்த செடிகள் இருந்தா உடனே தூக்கி போட்டுருங்க! துரதிஷ்டமாம்


வாஸ்து சாஸ்திரப்படி சில செடிகள் மற்றும் தாவரங்களை வீட்டில் வைத்திருந்தால் அது வீட்டுக்கு அமங்கலத்தையும், துரதிஷ்டத்தையும் கொடுக்கும்.
கள்ளிச்செடி
கள்ளிச்செடி அல்லது அது தொடர்புடைய முள் செடிகளை வீட்டில் வளர்க்கக்கூடாது, இதில் ரோஜா செடிகள் மட்டும் விதிவிலக்காகும்.

போன்சாய் செடிகள்
வாஸ்துபடி போன்சாய் தாவரங்கள் மற்றும் சிவப்பு மலர் பூக்கும் தாவரங்களை வீட்டுக்கு உள்ளே வைக்கக் கூடாது. ஆனால் வீட்டு வாசலில் அல்லது தோட்டத்தில் இவைகளை வைக்கலாம்.

புளி செடிகள்
புளி செடிகள் மற்றும் மரங்களில் கெட்ட சக்திகள் தங்கும் என்ற நம்பிக்கை வெகுகாலமாக உள்ளது. அதனால் அந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வீடு கட்டுவதற்கு முன்னர் ஆலோசனை பெற வேண்டும்.

காய்ந்த செடிகள்
காய்ந்து போன இலைகள் கொண்ட எந்த செடிகளையும் வீட்டில் வைக்கக்கூடாது. அது துரதிஷ்டத்தை கொண்டு வரும் என நம்பப்படுகிறது.

கருவேல செடிகள்
கருவேல செடிகள் அல்லது மரங்களை எக்காரணம் கொண்டும் வீட்டில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் வீட்டில் பிரச்சனைகள் உருவாகும்.

பஞ்சு செடிகள்
பஞ்சு செடிகள், பனை மரம் போன்றவற்றை வீட்டிலோ அல்லது வீட்டை சுற்றியோ வளர்க்கக்கூடாது. அது அமங்கலத்தை குறிக்கும்.

தொட்டி செடிகள்
தொட்டியில் வளர்க்கப்படும் செடிகளை வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு சுவர்கள் அருகில் வைக்கக்கூடாது.


http://www.viduppu.com/home-garden/03/175280?ref=ls_d_special

No comments:

Post a Comment