சிலர் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கடன் கொடுக்கக் கூடாது என்று கூறுவார்கள். அது ஏன்? அந்த நாளில் என்ன செய்தால் வீட்டில் செல்வத்தை அதிகரிக்கலாம் என்று பார்ப்போம்.
செவ்வாய், வெள்ளியில் பணம் கொடுக்க கூடாது ஏன்?
- செவ்வாய்கிழமை முருகனுக்கும், வெள்ளிக்கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.
- நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள் புரிகிறார்கள்.
- இந்த காரணத்தினால் தான் அன்றைய தினம் பணப் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதையும், மற்றவர்களுக்கு கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
- இல்லையெனில், நம்மிடம் இருக்கு அனைத்து செல்வ வளங்களும் நம்மை விட்டு சென்று விடும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது.
செவ்வாய் வெள்ளி கிழமையில் செய்ய வேண்டியவை என்ன?
- செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
- பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4- 5 மணி நேரத்தில் படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.
- நமது வீட்டில் செல்வம் எப்போதும் நிலைத்து இருக்க, வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
- வீட்டில் செல்வத்தை அதிகரிக்க சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம் மற்றும் ஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் ஆகியவற்றை வீட்டில் வைத்திருக்க வேண்டும்.
செய்யக் கூடாதவை என்ன?
- ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்காமல், இருவரும் வாசல் படிக்கு உள்ளே அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.
- குத்து விளக்கை தானாக அணைய விடக் கூடாது, ஊதியும் அணைக்கக் கூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.
- நம் வீட்டில் உள்ள வாசற்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் ஆகியவைகளில் உட்காரக் கூடாது.
- வீட்டை இரவில் பெருகும் போது, அந்த குப்பைகளை வெளியே கொட்டக் கூடாது.
- வீட்டில் விளக்கு ஏற்றிய பின் பால், தயிர், உப்பு, ஊசி ஆகிய பொருட்களை மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது.
- வீட்டில் சாமிக்கு பூஜை செய்யும் போது, ஈரத் துணியை உடுத்திக் கொண்டு பூஜை செய்யக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக