தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, March 15, 2018

சிவன் கோவில் வாசலில் நந்தி சிலை இருப்பது ஏன்?


ஆன்மீகம் என்று பார்க்கும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காரணங்களும் ஐதீகமும் இருக்கும். அதேபோல தான் சிவன் கோவில் வாசலில் நந்தி இருப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. அதாவது,
பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை.
அதனால் அவர்கள் சிவனை நினைத்து தவம் செய்தனர். அந்த தவத்தால் மனம் குளிர்ந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார்.
காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும் போது தங்க பேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விக்ரகம் போன்ற காளைக் கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது.
அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதாரின் காதில் சிவபெருமான் ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார்.
இவர் மீது பற்று கொண்டு நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார்.
நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். இந்த நந்தியின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமாக குணத்தை வெளிப்படுத்துகிறது.
சிவன் இவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார்.
தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்தி தேவர், அகம்படியர் என்ற இனத்தை சேர்ந்தவர்.
அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு. இதனால் தான் சிவன் கோவிலின் நுழை வாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நந்தியிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது.


http://news.lankasri.com/spiritual/03/174010?ref=ls_d_others

No comments:

Post a Comment