தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 மார்ச், 2018

வாழ்வு, மரணம் இரண்டிற்கும் அடையாளப் பாதையுள்ள காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் ஒரு மனிதன் புதிய வடிவமைப்பில் கற்களைக் கொண்டு உருவாக்கியது.
இந்தப் பெரும் கோவிலின் ஒவ்வொரு மூலையும் ராஜசிம்மாவிற்கு, கட்டிட கலையின் மேல் எந்தளவிற்கு காதல் இருந்திருக்கிறது என்பதை பிரதிபலிக்கிறது.
இந்த கோவிலானது புராணக் குறிப்புகள், கைலாசமலை சிவனின் மாளிகையை சித்தரித்தது போல, அந்த‌ வடிவில் இருக்க வேண்டுமென்ற சிந்தனையில் கட்டியது.
கோபுரம், கோவில் வாசல், வெளிப்புறம், கோவில் மண்டபம், மூலஸ்தானம் என்று அனைத்தும் ஒருங்கே கொண்ட முழுமையான கோவிலும் கூட இது.
ஒவ்வொரு வெளிப்புற சன்னதியிலும், சோமஸ்கந்த புராணக் குறிப்புகள் பொறிக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளது.

எல்லா சிவாலயங்களைப் போலவே இங்கும், மூலவர் அறையில் கருங் கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கம் நந்திக்கு நேரெதிராய் வீற்றிருக்கிறது.
ராஜசிம்மா, சிவனின் பெரும் பக்தனின் காரணத்தால், நாம் கோவிலின் பல கற்களில், சிவனின் சிற்பத்தை காணலாம்.
பல நந்தி, சிங்கச் சிற்பங்களையும் நாம் இங்கு காணலாம். புராணக் குறிப்புகள், நந்தியை பல்லவ சாம்ராஜ்யத்தின் சின்னமாக சித்தரிக்கிறது.
இதனால், நந்திக்கு, இத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதோடு, இன்னும் பிற தெய்வங்களான, விஷ்ணு, பிரம்மா, விநாயக, துர்கா ஆகியவற்றின் சிற்பங்கள் கோவிலின் உள்ளே இருக்கிறது.
இவ்வளவு சிறப்பு மிக்க கைலாசநாதர் கோவிலின் உள்ளே ஒரு வட்ட வடிவம் கொண்ட சுற்றுப் பாதை உள்ளது. அதனுள்ளே ஊர்ந்து சென்று, பல படிகள் ஏறித் தான் வெளியே வர முடியுமாம்.
இந்த‌ பாதை, வாழ்வுக்கும், மரணத்திற்கும் ஒரு அடையாளமாக நம்பப்படுகிறது.

http://news.lankasri.com/history/03/173927?ref=ls_d_others

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக