ராஜேந்திரப்பட்டினத்தில் உள்ள ஆலமரத்தின் வேரில், உருவாகியுள்ள குழந்தையுடன் பெண் அமர்ந்திருப்பது போன்ற அம்மன் உருவம் அப்பகுதியில் உள்ளவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜேந்திரப்பட்டினத்தில் இருந்து கொக்கரசன்பேட்டை செல்லும் வழியில், பெலாந்துறை வாய்க்கால் கரை அருகில் பழமையான ஆலமரத்தின் அடி வேர் பகுதியில், ஒரு பெண், குழந்தையுடன் அமர்ந்திருப்பது போன்ற தோற்றம் காணப்படுகிறது.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், மரத்தின் அடியில் அம்மன் எழுந்து அருளியதாக, பூஜை செய்து, வழிபட்டு வருகின்றனர்.
இத்தகவல் பரவியதால், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் அங்கு வந்து, பூஜை செய்து செல்கின்றனர்.
http://news.lankasri.com/spiritual/03/170011?ref=ls_d_others
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக