தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, January 29, 2018

பரபரப்பை உண்டாக்கிய ஆண்டாள் பிறந்த ஊர் பற்றி தெரியுமா?


தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆண்டாளைப் பற்றியும், அவரின் ஊரைப் பற்றியும் இங்கு அறிந்து கொள்வோம்.
தமிழகத்தில், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரே ஒரு வைணவ பெண் ஆழ்வார் ஆண்டாள். பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், பூமாதேவியின் குழந்தை என்று கருதப்படுகிறார்.
திருவில்லிப்புதூர் தான் ஆண்டாள் பிறந்த ஊராக நம்பப்படுகிறது. ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் இவரை வளர்த்ததாகக் கூறப்படுகிறது.

அவர் ஆண்டாளுக்கு வைத்த பெயர் கோதை. பெரியாழ்வாரின் வீட்டில் வளர்ந்ததால், ஆண்டாளும் வைணவக் கடவுளான திருமாலை வணங்கத் தொடங்கியுள்ளார்.
அவரையே தனது துணையாகக் கருதி பாடல்களையும் பின்னர் எழுதினார். மேலும், தமிழுக்காக திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பாடற் தொகுதிகளையும் அவர் எழுதியதாக குறிப்பிடுகின்றனர்.
திருமாலை மணக்க நினைத்து தனது திருமணத்தை நிறுத்தி வந்த ஆண்டாள், இறைவனிடத்தில் வேண்டியதாகவும், அதன் பின்னர் இறைவன் பெரியாழ்வாரின் கனவில் வந்து திருவரங்கத்தில் மணப்பெண் அலங்காரத்துடன் ஆண்டாளை, விடுமாறு கூறியதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
மேலும், அவ்வாறு அலங்கரித்து ஆண்டாளை விட்டதும், அவர் மறைந்துவிட்டதாகவும் கூறுகின்றனர்.
ஆண்டாள் அமைந்துள்ள திருவில்லிப்புதூர், மதுரையில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து சுமார் 542 கிலோ மீட்டர் பயணம் செய்து திருச்சி, மதுரை வழியாக இந்த ஊரை அடையலாம்.

திருவில்லிப்புதூரின் அருகிலேயே விமான நிலையம் அமைந்துள்ளது. மேலும், இவ்வூரிலேயே ரயில் நிலையமும் அமைந்துள்ளதால் இங்கு பயணம் செய்வது எளிது.
திருவில்லிப்புதூரின் சிறப்பு என்னவென்றால், இங்கு 11 அடுக்கு கோபுரம் கொண்ட ஆண்டாள் கோயில் அமைந்துள்ளது. இது தமிழகத்திலேயே மிகவும் பிரபலமான கோயிலாகும்.

மேலும், தமிழக அரசின் சின்னத்திலும் ஆண்டாள் கோயில் உள்ளது. இது திருச்சி திருவரங்கம் கோயிலைப் போன்ற அமைப்பு கொண்டது.
திருவில்லிப்புதூரின் அருகில் கட்டழகர் கோயில், வைத்தியநாதசுவாமி கோயில், திருமலைநாயக்கர் மஹால், அணில்கள் சரணாலயம் மேகமலை, குமுளி என நிறைய சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளன.
ஆண்டாள் கோயிலின் அருகில், ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்தபோது கட்டப்பட்ட ‘பென்னிங்க்டன் நூலகம்’ அமைந்துள்ளது.


http://news.lankasri.com/special/03/170923?ref=ls_d_others

No comments:

Post a Comment