தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, January 21, 2018

இது தெரிந்தால் இனி பூண்டு கலந்த பால்தான் குடிப்பிங்க...? 20 வயதிற்கு மேற்பட்டவருக்கு நடக்கும் மாற்றம்!!


பெற்றோர்களின் உணவு மந்திரத்தின் பின்னணியில் பால் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பால் ஒருவரது உயரத்தினை அதிகரிக்கும் என்ற கருத்து பலர் மத்தியில் நிலவுகின்றது.
நீங்கள் 20 வயதுடையவராக இருந்தால் உங்களது வளர்ச்சியானது நிறைவுற்று விட்டது என்று அர்த்தமாகும்.
நீங்கள் பால் குடிப்பதினால் உங்களது உயரத்தை அதிகரிக்க முடியாது. ஏனெனில் நீங்கள் முழுவதுமாக இந்த வயதிற்குள் வளர்ந்து விடுவீர்கள்.. ஆனால் பால் அருந்துவதால் பல்வேறு மாற்றங்கள் நிலவுகின்றது.
பால் குடிப்பது குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
குழந்தைகளின் உயரம் என்பது பெற்றோர்களின் உடல் ஆரோக்கியம், அவர்களது உயரம் மற்றும் அவர்களது பால் உட்கொள்ளும் அளவுகளை பொறுத்து உள்ளது.
மற்றொரு ஆய்வில் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் காரணமாக தங்களது உயரத்தை 2.5 செ.மீ வரையில் அதிகரிக்க முடியுமாம்..
ஆனால், இதற்கு ஆகும் கால அளவானது மூன்று ஆண்டுகளாகும். எலும்புகளின் வளர்ச்சி தான் உயரம் ஆகும்.
கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாத ஒன்று என்பது நம் அனைவருக்கும் மிக துல்லியமாக தெரிந்த ஒன்று தான்..
தினமும் பால் குடிப்பதினால் எலும்புகளின் அடர்த்தியானது அதிகரிக்கிறது. மேலும் கால்சியம் அதிகமுள்ள உணவுகள் எலும்புகளை வலுவாக்கவும் உதவியாக உள்ளது.
கவனிப்பு இல்லாமல் இருக்கும் சில நாள்பட்ட நோய்களான கேன்சர், கீழ் வாதம் போன்ற நோய்களும் கூட குழந்தைகள் சரியான வளர்ச்சியடையாமல் போக முக்கிய காரணமாக உள்ளது.
இடுப்பு வலி என்பது இன்று பலரை வாட்டி எடுக்கும் ஒரு பிரச்சனை ஆகும். இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், பூண்டை பாலில் காய்ச்சி குடித்தால் நல்ல பலனைக் காணலாம்.
இரத்தத்தில் கொழுப்பு உள்ளவர்கள் இந்த பூண்டு கலந்த பாலை பருகுவது என்பது மிகவும் நல்லது ஆகும்.
பூண்டு கலந்த பால் உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.
மலேரியா, காசநோய், யானைக்கால் நோய் மற்றும் ப்ளேக் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது. இதனால் இந்த நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பூண்டு கலந்த பாலை பருகலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் வயிற்றில் புழுக்கள் இருக்கும் பிரச்சனை உள்ளது. இவர்கள் பூண்டு கலந்த பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம்.

http://www.manithan.com/health/04/158438?ref=recomended-manithan

No comments:

Post a Comment