தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, January 26, 2018

இராவணன் ஒழுக்கமானவனா? – தெரிந்த கதையின் தெரியாத பகுதி !


“என்னதான் சீதையை இராவணன் கடத்திக் கொண்டு சென்றான் என்றாலும் அவளை அவன் பலவந்தமாக அடைய முயற்சி செய்யவில்லையே, இதன்படி பார்த்தால் இராவணன் ஒழுக்கமானவன் என்று இன்றும் பலர் கூறுவருகின்றார்கள்.
இங்கு இராவணன் நல்லவனா? ஒழுக்கமானவனா என்ற விவாதத்திற்கு நாம்வரவில்லை. சீதையை தூக்கிச்சென்ற இராவணன் அவளை ஏன் பலவந்தமாக அடையவில்லை?
அவன் அசுரகுலத் தலைவன், சாவை வெல்லும் வரமும் பெற்றவன் அவன் நினைத்திருந்தால் சீதையை பலவந்தமாக அடைந்திருக்கலாம் ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. சீதையின் விருப்பத்திற்காக காத்திருந்தான், காவலிருந்தால். இதற்கு காரணம் என்ன?
ஒருசமயம் மைலாய மலையில் தங்கியிருந்து தேவலோகத்தை தாக்கத் திட்டமிடுகின்றான் இராவணன். அப்போது அப்சரப் பெண்களில் ஒருத்தியான ரம்பையை காண்கின்றான், அவள் அழகில் கவரப்படுகின்றான்.
அவளை அடைய ஆசைகொண்டு அவளின் விருப்பத்தை வினவுகின்றான் இராவணன். அதற்கு நீங்கள் என் மாமனார் முறை என பதில் கூறும் ரம்பை இராவணனின் ஆசைக்கு இணங்க மறுக்கின்றாள்.
குபேரனனும், இராவணனும் சகோதரர்கள் முறை. குபேரனனின் மகன் நளகூவரனுக்கும், ரம்பைக்கும் இடையில் காதலிருந்ததால், அம்முறைப்படி இராவணனன் ரம்பைக்கு மாமனாராகின்றான்.
எனினும், அம்சரப் பெண்களுக்கு இது போன்ற உறவுமுறை விதிகள் எதுவும் இல்லை எனக் கூறிய இராவணன் ரம்பையை பலவந்தமாக அடைகின்றான்.
இராவணனின் துர்செயலை ஞானத்தால் அறியும் நளகூவரன் “பலவந்தமான எப் பெண்ணை அடைந்தாலும், விருப்பமின்றி பெண்ணை பலாத்காரம் செய்தாலும் அவன் தலை சில்லுகளாக சிதறிப்போகும்” என்ற பயங்கரச் சாபத்தை இராவணனுக்கு அளிக்கின்றான்.
இந்தச் சாபத்தை அறிந்த இராவணன் அன்று தொடக்கம் எந்தப்பெண்ணையும் பலவந்தமாக அடையும் வழக்கத்தை விட்டுவிட்டான். இதன்காரணமாகவே பலத்தால் சீதையைக் கவர்ந்த இராவணன் பலவந்தமாக அவளை அடையவில்லை.
http://www.manithan.com/special/04/159263

No comments:

Post a Comment