தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 ஜனவரி, 2018

விலங்கு உருவத்தில் மாறும் அதிசய மரங்கள்: எங்கு உள்ளது தெரியுமா?

ஆந்திர மாநிலத்தில் நல்கொண்டா பகுதிக்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ள காடு ஒன்றில் இயற்கையாகவே வளர்ந்து உருவான மரம் ஒன்று உள்ளது.
இந்த மரம் தனது வடிவத்தை விலங்குகளாக மாற்றிக் கொள்ளும் என்று கூறப்படுகிறது, ஆனால் இது செயற்கையாக வடிவமைக்கப்பட்டது என்று கூறுவதற்கான ஆதாரங்கள் ஏதுமே இல்லை.
மரத்தின் சிறப்பு என்ன?
உலகின் பெரிய மரமான போபப் மரத்தைப் போன்று பெரிய அளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது.
அனகோண்டா உருவம் இந்த மரத்தில் ஒன்று உள்ளது, இந்த உருவம் பார்ப்பதற்கு அப்படியே அனகோண்டா பாம்பு போலவே இருக்கிறது.

இந்த அனகோண்டா வளைந்து வாயைப் பிளந்தவாறு, உண்மையான பாம்பைப் போலவே தோற்றமளிக்கிறது.
இம்மரத்தின் மற்றொரு பக்கத்தில் முதலையின் உருவம் பதித்தது போன்றும், முதலையின் உடலில் இருக்கும் மேடு பள்ளங்கள் கூட அப்படியே அமைந்திருக்கும் வகையில் உள்ளது.

மேலும் இந்த மரம் முழுவதும் கிங்காங் குரங்கு உருவம், சிலந்தி, தேள் , பாம்பு, பறவைகள், பூச்சி இனங்கள் போன்ற அனைத்து உயிரினங்களின் உருவமும் இருப்பதுடன், இவைகள் உயிருடன் இருப்பது போன்றும் தோற்றமளிக்கிறதாம்.

அடர்ந்த காடு என்பதால் யாரும் இங்கு இரவு நேரங்களில் செல்வதில்லையாம். ஆனால் இந்த மரம் இன்று வரை மர்மமாகவே இருந்து வருகிறது.


http://news.lankasri.com/natural/03/169507?ref=ls_d_others

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக