சத்தீஸ்கர் மாநிலத்தில் பூதேஸ்வர் மகாதேவ் என்ற சுயம்பு சிவலிங்கம் வருடந்தோறும் வளர்ந்து கொண்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரின் ராய்ப்பூரிலிருந்து சுமார் 90 கி.மீ. தூரத்தில் காரியாபந்த் என்ற மாவட்டத்தில் மரோடா என்ற கிராம பகுதியில் உள்ள காட்டில் பூதேஸ்வர் மகாதேவ் என்னும் சிவலிங்கம் அமைந்துள்ளது.
இந்த சுயம்புலிங்கம் தான் உலக அளவில் பெரிய அளவுள்ள சுயம்பு சிவலிங்கமாக கருதப்படுகின்றது.
ஒவ்வொரு வருடமும் இந்த சிவலிங்கம் குறிப்பிட்ட அளவுக்கு வளர்ச்சி அடைகிறது என்பது ஒரு அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இந்த சிவலிங்கத்தின் அளவு 1952-ம் ஆண்டு முதல் அளவிடப்பட்டு அன்று முதல் இன்று வரை அதன் உயரம் மற்றும் அகலம் ஆகிய இரண்டு பரிமாணங்களில் வளர்ச்சி அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்த சிவலிங்கம் அதன் வளரும் சக்திக்காக அனைவராலும் பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றார்கள்.
சுற்றுப்புற மக்களிடையே இந்த சிவலிங்கம் ‘பாகுரா மகாதேவ்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மக்கள் அங்கு வந்து வழிபட்டு செல்வதாக கோவில் நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளார்கள்.
தற்போதைய அதன் உயரம் 18 அடியாகவும், சுற்றளவு 20 அடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த சிவலிங்கத்தின் அளவானது ஒவ்வொரு வருடமும் வரக்கூடிய மகாசிவராத்திரி அன்று வருவாய்த் துறை அதிகாரிகளால் அளவீடு செய்யப்படுவதாக கோவிலில் பூஜை செய்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
சுற்றிலுமுள்ள 17 கிராமத்தை சேர்ந்தவர்கள் ‘மக்கள் சபை’ அமைத்து கோவில் நிர்வாகத்தை கவனித்து வருகிறார்கள்.
இந்த பூதேஸ்வர் மகாதேவ் சுயம்பு சிவலிங்கம் ஒவ்வொரு வருடமும் எவ்வாறு வளர்கிறது என்பதற்கான விடை தெரியாத மர்மமாகவே உள்ளது.
http://news.lankasri.com/spiritual/03/169517?ref=ls_d_others
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக