தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, September 1, 2017

ஆசியாவின் நோபல் விருதை வென்ற ஈழத் தமிழ் பெண்மணி! மேடையில் உருக்கமான உரை

ஈழத் தமிழ் பெண்மணி கெத்சி சண்முகத்திற்கு ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படும் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் கலாச்சார நிலையத்தில் இந்த விழா நேற்று இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் உளவள ஆலோசகர் கெத்சி சண்முகம் தமக்கான விருதை பெற்றுக்கொண்டார்.
இதில் உரையாற்றிய கெத்சி சண்முகம்,
மிகவும் மோசமான வன்முறை, இழப்பு, அவலங்களுக்கு மத்தியிலும், அன்பு, பராமரிப்பு, நம்பிக்கைக்கான சாத்தியம் இலங்கையில் பெருமளவில் இருக்கின்றது. என்று மிகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபரான ரமோன் மகசேசே நினைவாக ஆண்டு தோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு 82 வயதுடைய ஈழத் தமிழ்ப் பெண்மணி கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தோனேசியா, சிங்கப்பூர் நாட்டவருக்கும் இந்த விருது பகிர்ந்து வழங்கப்படுகிறது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மிகவும் கூடுதலாகப் பாதிக்கப்பட்ட பெண்களையும் சிறுவர்களையும் பராமரிப்பதில் கெத்சி அம்மையார் வெளிப்படுத்திய மனித நேயத்திற்காகவும், உளவியல் துணை வழங்குவதில் இலங்கையின் ஆற்றலை கட்டியெழுப்புவதில் இவரது அயராத உழைப்பிற்காகவும் 2017 ஆண்டுக்கான மக்சேசே விருது இவருக்கு வழங்கப்படுவதாக ரமொன் மக்சேசே மன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/special/01/157047

No comments:

Post a Comment