தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 20 செப்டம்பர், 2017

பல்லவர்களின் இந்த தொழில்நுட்ப அறிவு

வரலாற்றுச் சிறப்புள்ள சிற்பங்களுக்கு மாமல்லபுரம் பெயர் பெற்றது.
பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த சிற்பங்களை கண்டு வியக்காதவர் எவரும் இல்லை என்று சொல்லலாம்.
ஆரம்ப காலங்களில், கோவில்கள் செங்கல் மற்றும் மரத்தால் கட்டப்பட்டன. அதன் பிறகு 7 ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் முதன் முதலாக பாறைகளில் கோவில்கள் அமைத்தனர்.
இத்தகைய கோவில்கள் அமைக்கும் போது, சுவாமி அபிஷேக தீர்த்தத்திற்காக அதன் அருகில் கிணறு அமைப்பது வழக்கம்.
மாமல்லபுரம் கடற்கரை கோவிலிலும் இத்தகைய கிணறு பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுக்கு முன்பு, மாமல்லபுரம் கடற்கரை கோவில் மணல் சூழ்ந்து, கோவில் புதையுண்டிருந்தது. அகழ்வாராய்ச்சியில் கோவில் கண்டறியப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது. அப்போது, பழங்கால கிணறு அறியப்படவில்லை.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பின் போது, நில மட்டத்தின் கீழ், பாறை கற்களாலான அகல தொட்டி காணப்பட்டது.
அதனை ஆய்வு செய்த போது, அதன் கீழ் ஆறு அடி ஆழ கிணறு அமைத்திருப்பது தெரியவந்தது.
இக்கிணற்றின் நீர்மட்டம், பொதுவாக குறைவாகவே இருக்கும். கடல் மட்டம், கிணற்றின் மேல்மட்ட பரப்பிற்கு இணையாக அமைந்தால், கிணற்றிலும் நீரூற்று அதிகரித்து, அதன் மேற்பரப்பு வரை நீர்மட்டம் மேலேழுந்து பரவும்.
தற்போதும், அவ்வாறு நீர் பெருக்கெடுக்கிறது. இதனை கண்டு அனைவரும் வியக்கின்றனர்.
கிணற்றை வைத்தே, பழங்கால தரைமட்டத்தை அறிய முடிகிறது. ஒரு சிலரே, இது தெரிந்து ஆச்சரியப்படுகின்றனர்.
இதனை பற்றி அனைத்து மக்களும் அறிய கிணறு பற்றிய தகவல் பலகை அமைக்கவேண்டும் என்று சுற்றுலா பயணிகளால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பல்லவர்களின் இந்த தொழில்நுட்ப அறிவு அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக