ஷாஜகானின் 17ஆவது மனைவிக்கு கட்டிய மண்டபத்தை விட சோழ மன்னவனின் தாய்க்கு கட்டிய கோவில் - பரவ செய்யுங்கள்.
பளிங்குக் கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமா?
ஐயா "பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்....வழி....என்று இழுத்ததும், அந்த பேர்ல இங்க எந்த கோயிலும் இல்லீங்களே, "ராமசாமி கோயில்” தான் ஒன்னு இருக்கு,அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு அவர கூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர், பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது! உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது. "பட்டீஸ்வரம்" தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்!.
ஐயா "பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்....வழி....என்று இழுத்ததும், அந்த பேர்ல இங்க எந்த கோயிலும் இல்லீங்களே, "ராமசாமி கோயில்” தான் ஒன்னு இருக்கு,அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு அவர கூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர், பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது! உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது. "பட்டீஸ்வரம்" தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்!.
தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த "பஞ்சவன் மாதேவி" , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான் கங்கை முதல் கடாரம் வரை வென்ற "ராஜேந்திர சோழன்". உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம். தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது, தாஜ் மஹாலை நான் குறை கூற வில்லை அதுவும் பாசத்தின் வெளிப்பாடு தான், ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா? குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்? பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா?வேதனை! இந்த பட்டீஸ்வரத்தின்அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார், தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் "சோழன் மாளிகை". கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.
பஞ்சவன்மாதேவி எப்பேர்பட்ட சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த பெண்மணியாக இருந்தால் தன் அன்னை அல்லாத ஒரு பெண்ணுக்கு பள்ளிப்படை அமைத்து இருப்பார் ராஜேந்திர சோழர். தனது சிற்றன்னையின் மேல் எத்தனை அன்பு இருந்தால் இந்த எண்ணம் அவருக்கு தோன்றி இருக்கும். இது இந்த மண்ணில் வாழ்ந்த மகத்தான பெண்ணின் நினைவிடம் மட்டும் அல்ல, உண்மையான தாய் பாசத்தால் தனயன் எழுப்பிய புனித தளம். உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த புண்ணியவதி தரிசித்துவிட்டுவாருங்கள்,அப்படியே தனயன் ராஜேந்திர சோழனையும் நினைவு கூறுங்கள் …
பட்டீச்சரம் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில்
பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில் (பஞ்சவன்மாதேவீச்சரம்) என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம்பட்டீஸ்வரத்திற்கும் திருவிடைமருதூருக்கும் அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு பள்ளிப்படைக்கோயில் ஆகும். பட்டீஸ்வரத்திலிருந்து திருமேற்றளிக்குச் செல்லும் சாலையில் இப்பள்ளிப்படை அமைந்துள்ளது. இக்கோயிலை உள்ளூர் மக்கள் ரமசாமி கோயில் என அழைக்கின்றனர்
இந்த பள்ளிப்படை முதலாம் இராஜராஜ சோழனின் தேவியும், பழுவேட்டரையரின் மகளுமாகிய பஞ்சவன் மாதேவியின் நினைவாக முதலாம் இராசேந்திரனால் அவ்வம்மையாரைப் பள்ளிப்படுத்தி எடுக்கப்பெற்ற கற்றளியே பள்ளிப்படை கோயிலாகும். இராசேந்திர சோழனுக்கு பஞ்சவன் மாதேவி சிற்றன்னை ஆவார். பஞ்சவன் மாதேவியின் உடலைப் புதைத்து அதன்மேல் லிங்கத்தைப் பிரதிட்டை செய்து கட்டப்பட்ட பள்ளிப்படை என்பது இதன் சிறப்பு. கோயிலின் உள்ளே முன் பகுதியில் பஞ்சவன் மாதேவியின் சிலை உள்ளது. கோயில் பழுவேட்டரைர்ய கட்டுமான வடிவத்தைப் பிரதிபலிக்கும் தன்மையைக் கொண்டவை. இராஜேந்திர சோழன் எடுத்த இக்கற்கோயில் திருமலைராயன் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது[1]
கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் அதனுடன் இணைந்த அம்மன் கோயில்கள் பரிவாராலயமாக சண்டீசர் கோயில், கிழக்குக் கோபுர வாயில் ஆகியவற்றோடு பஞ்சவன்மாதேவீச்சரம் அமைந்துள்ளது. அர்த்தமண்டபத்திலுள்ள ரிஷபமும், அங்குள்ள சிம்மத்தூண் ஒன்றும் பழுவேட்டரையர்களின் கலை அமைதியோடு விளங்குகின்றன.[1]
பழுவேட்டரையர் மரபில் வந்த பஞ்சவன்மாதேவி, ராஜேந்திரனை தன் சொந்த மகனாகவே எண்ணி அன்பு பாராட்டினார். அதனால், இந்த இறையுணர்வு மிக்க சீமாட்டி இயற்கை எய்தியபோது அந்தப் பிரிவைத் தாங்கமாட்டாத அரசர், அன்னையின் நினைவாக, பேரரசி புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளிப்படைக்கோயிலான பஞ்சவன்மாதேவீச்சரத்தைக் கட்டினார். இப்பள்ளிப்படை, தாயின்மீது அவர் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்த கட்டப்பட்ட கலைக்கோயிலாகும்.[2]
பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயிலுக்குள் செல்வதென்றால் ஒரு தோப்பிற்குள் செடிகொடிகள் மண்டிக்கிடக்கும் இடத்தில் புதர்கள் நிறைந்த சூழலில் பார்க்கவேண்டிய அவல நிலை இருந்தது. அனைத்தையும் கடந்து கோயிலுக்குள் சென்றால் அதிக எண்ணிக்கையிலான வவ்வால்கள் நம் முன் சுற்றி வந்து பயமுறுத்தி மூலவரைப் பார்க்க அனுமதிக்காது. பராமரிப்பின்றி அழிவின் நிலையில் இருந்த இந்தப் பள்ளிப்படைக் கோயில் பார்க்கவே இயலாதவாறு புதர் மண்டிப்போய் பாழ்பட்டு போனது. என்றாலும், இக்கோயில் 1978 இல் தமிழ்நாட்டு தொல்லியல்துறையால் கண்டறியப்பட்டு சீரமைக்கப்பட்டது.[3]. தற்போது கட்டுமானத்தில் சில இடங்களில் மீண்டும் செடிகள் முளைக்க ஆரம்பித்துள்ளன.
- 1- குடவாயில் பாலசுப்பிரமணியன், பழையாறை மாநகர், பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீதுர்க்காம்பிகை திருக்கோயில் கும்பாபிஷேக மலர், 1999
- ↑ 2-தேவமணி ரஃபேல், அன்னைக்கு ஓர் ஆலயம், கல்கி தீபாவளி மலர் 2002
- ↑ 3-"பஞ்சவன் மாதேவி". கட்டுரை. தமிழ் மரபு அறக்கட்டளை. பார்த்த நாள் 15 சனவரி 2017.
https://ta.wikipedia.org/wiki/பட்டீச்சரம்_பஞ்சவன்_மாதேவி_பள்ளிப்படைக்_கோயில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக