தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

1700 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய நகரம் கண்டுபிடிப்பு!

துனிசியா நாட்டின் அருகே மத்தியதரைக் கடலில் சுமார் 49 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, 1700 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கி.பி. 365ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடலில் ஏற்பட்ட பேரலையால் எகிப்தில் உள்ள அலெக்சாண்ட்ரியா நகரம், கிரேக்கத்தில் உள்ள கிரேட் தீவு ஆகியவை கடலில் மூழ்கின. அவை மூழ்கி கிடந்தது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் துனிசியா நாட்டின் அருகே மத்தியதரைக் கடலில் சுமார் 49 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள நகரம் ஒன்று மூழ்கி கிடப்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4ஆம் நூற்றாண்டில் நியாபொலிஸ் என்ற நகரம் கடலில் மூழ்கியதாக தகவல்கள் உள்ளன. இது அந்த நகரமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த நகரில் ஏராளமான கட்டடங்கள் தண்ணீருக்குள் முழ்கி இருப்பது தெளிவாக புலப்படுகின்றன. மேலும், அந்த நகரில் அப்போதே பல்வேறு தொழிற்சாலைகள் காணப்பட்டுள்ளதாகவும் அவையும் மூழ்கியிருப்பது தெளிவாக புலப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஒரு தொழிற்சாலையில் 100 இராட்சத தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலை இரசாயனம் தயாரிக்கும் தொழிற்சாலையாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
http://www.tamilwin.com/special/01/157406

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக