மூட்டு வலி வருவதற்கு சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காமல் இருப்பது போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது.
உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால் மூட்டுவலி ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மூட்டுகளில் அசையும் மூட்டு, அசையாமூட்டு என்று இருவகை உண்டு.
தலையில் எலும்புகள் கூடி இருக்கும் இடம் அசையா மூட்டு. நாம் பேசும்போது கீழ்தாடை மூட்டு வலியின்றி வாழ வழி உண்டு.
ஓடுகிறோம், விளையாடுகிறோம், வேலைகளைப் பார்க்கிறோம், இவைகளில் நமது அசையும் மூட்டுகள் அதிக பங்காற்றுகிறது.
இந்த மூட்டுகளில் தோள்மூட்டு, முழங்கைமூட்டு, மணிக்கட்டு மூட்டு, இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு போன்றவை முக்கியமானவை.
மூட்டுகளில் இத்தனை இருந்தாலும், நாம் முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியைத்தான் பெரும்பாலும் மூட்டுவலி என்று சொல்கிறோம்.
முழங்கால் மூட்டில் பாதிப்பு ஏற்பட்டால் மூட்டு வசதியாக மடிந்து கொடுக்காது. கடும் வலி ஏற்படும். வீக்கம் தோன்றும்.
இடுப்பில் உள்ள மூட்டு சரியாக இயங்கவில்லை என்றால் முதுகெலும்பின் மூலம் ஓரளவு அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். மூட்டுவலிக்கு முக்கியமான காரணம் அதில் ஏற்படும் தேய்மானம்.
இந்த மூட்டுகளில் வழுவழுப்பான திசுக்களான குருத்தெலும்பின் வழவழப்புத்தன்மை குறைந்துவிட்டால் மூட்டை அசைக்கும்போது சோர்வும் வலியும் ஏற்படும். அதைத் தான் தேய்மானம் என்கிறோம்.
மூட்டுவலியை தடுக்கும் முறைகள்
- உருளைக்கிழங்கு (பச்சையாக) ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
- உருளைக்கிழங்கு சாறையும் அருந்தலாம், இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
- ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
- இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி தேன், ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினம் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
- வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு மூட்டில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.
உணவுப் பழக்கம்
- வாழைப்பழம் அதிகமாக சாப்பிட வேண்டும்.
- காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும்.
- கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.
- கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
- காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக