ராசிபுரம் அருகே தட்டான்குட்டையில் பிரசித்தி பெற்ற பச்சை தண்ணீர் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது தண்ணீரில் விளக்கு ஏறிந்த சம்பவம் பக்தர்களை அதிசயத்தில் ஆழ்த்தியது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தட்டான்குட்டையில் பிரசித்திபெற்ற பச்சை தண்ணீர் மாரியம்மன் கோவில் வெகு விமர்சையாக திருவிழா நடாத்தப்படும்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழாவின் போது தண்ணீரில் கோவில் விளக்கை எரிய வைப்பது வழக்கம்.
இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 8-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
அதுமட்டுமின்றி திருவிழாவையொட்டி நேற்று அதிகாலையில் தண்ணீரில் விளக்கை எரிய வைக்க, பூசாரிகள் கோவில் கிணற்றில் புனித நீராடி குடத்தில் தண்ணீரை எடுத்து வந்தனர்.
அப்போது அவர்கள் அம்மன் சாமி முன்பு சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணெய் முழுவதையும் வடித்துவிட்டு கிணற்றில் இருந்து கொண்டு வந்த தண்ணீரை அந்த விளக்கில் ஊற்றினர்.
பின்னர் அந்த விளக்கில் தீபம் ஏற்றிய போது, விளக்கு எண்ணெயில் எரிவது போல் தண்ணீரிலும் தீபம் சுடர்விட்டு எரிந்தது.
தண்ணீரில் அதிகாலையில் பற்ற வைக்கப்பட்ட விளக்கு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் எரிந்து பின்னர் அணைந்தது.
அதன்பின்னர் எண்ணெயை கொண்டு விளக்கில் மீண்டும் தீபம் ஏற்றப்பட்டது.
தண்ணீரில் விளக்கு எரியும் இந்த அதிசயம் திருவிழா நடக்கும் நாள் அன்று மட்டுமே நடைபெறும்.
இந்த அதிசய காட்சியை திருவிழாவிற்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கண்டு பக்தி பரவசம் அடைந்தனர்.
http://news.lankasri.com/spiritual/03/176194?ref=ls_d_others
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக