தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

உங்களது மலம் எந்த நிறத்தில் உள்ளது: ஆரோக்கியத்தை காட்டிக் கொடுக்கும்


ஒருவரது கழிக்கும் மலத்தின் நிறம், அமைப்பு மற்றும் திடநிலை போன்றவற்றை கொண்டு உடல் ஆரோக்கியத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இறுக்கமான மலம்
உங்கள் மலம் மிகவும் இறுக்கமாகவும், வெளியே வர முடியாத அளவுக்கு கெட்டியாகவும் இருந்தால் உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளது அல்லது மலச்சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.
எனவே அதிகளவு நீரை குடிக்க வேண்டும், நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
கருப்பு நிற மலம்
அடர்நிற பழங்கள் அல்லது உணவுப்பொருட்கள், இரும்புச்சத்துள்ள மாத்திரைகளை உட்கொண்டால் கருப்பு நிற மலம் வெளியேறும்.
இதுதவிர தொடர்ந்து இப்பிரச்சனை இருந்தால், அல்சர், உணவுக்குழாயில் புண் போன்றவை கூட காரணமாக இருக்கலாம், எதற்கும் மருத்துவரை பார்ப்பது சிறந்தது.
சிவப்பு நிற மலம்
இதற்கு செரிமான பாதையான பெருங்குடல் அல்லது மலக்குடலில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக இருக்கலாம்.
கட்டிகள், புற்றுநோய், குடல் அழற்சி போன்றவையும் இதற்கு காரணமாகும்.
சிவப்பு நிற உணவுகளை அதிகம் உட்கொண்டிருந்தாலும் மலம் சிவப்பு நிறத்தில் வெளியாகும்.
இதேபோன்று பச்சை நிற காய்கறிகளான கீரையை உட்கொண்டிருந்தால் பச்சை நிற மலம் வெளியாகும்.
வயிற்றுப் போக்கு இருந்தாலும் பச்சை நிற மலம் வெளியாகும்.
இரத்தம் கலந்த மலம்
வயிற்று அல்சர், கோலிடிஸ், அசாதாரண இரத்த நாளங்கள், இரைப்பை சுவற்றில் உள்ள அழற்சி, புற்றுநோய், அழற்சியுள்ள குடல் நோய் அல்லது குடல் தொற்றுக்களாலும் கழிக்கும் மலத்தில் இரத்தம் கலந்து வெளிவரும்.
இதேபோன்று வழக்கத்துக்கு மாறாக கடுமையான துர்நாற்றத்துடன் இருந்தால் ஊட்டசத்துக் குறைபாடு காரணமாக இருக்கலாம்.

http://news.lankasri.com/health/03/176331?ref=ls_d_lifestyle

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக