வடக்கு பக்கம் தலை வைத்து படுத்தால் அவர்கள் இறந்துவிடுவார்கள் என்பது ஜப்பான் நாட்டு மக்களின் நம்பிக்கை,
அவர்கள் இதனை, Kita-Makura என அழைக்கின்றனர். Kita என்றால் வடக்கு, Makura என்றால் தலையணை. அதாவது, வடக்கில் தலைவைத்து படுத்தால், அவர்களது வாழ்வில், ஏதேனும் துயர சம்பவம் நடைபெறும், அல்லது அவர்கள் இறந்துவிடுவார்கள் என்பது நம்பிக்கை.
இதற்கு காரணம் என்னவெனில், சுமார், 2500 ஆண்டுகளுக்கு முன்னர், sal மரத்துக்கு அடியில் புத்தர் வடக்கு பக்கம் தலை வைத்து படுத்துள்ளார். இதன் காரணத்தினாலேயே, மரணம் அவரை ஆட்டுகொண்டது.
இந்த கதையை மக்கள் நம்புவதால், அந்நாட்டு மக்கள் இன்று வரை வடக்கு பக்கம் தலை வைத்து படுப்பதில்லை.
அறிவியல் கூறும் காரணம்
வடக்கே தலைவைத்து படுக்கக் கூடாது. அப்படிப் படுத்தால், மன உளைச்சலும், தூக்கமின்மையும், ஞாபகமறதியும் ஏற்படும். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். இதற்குக் காரணம் கிழக்கு மேற்காக சூரியனின் பாதை செல்கின்றது. வடக்கு தெற்காக காந்தப் பாதை செல்கின்றது.பூமியில் வடதுருவம் தென் துருவம் என்று இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன.
பூமியையே மிகப்பெரிய காந்தம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். காந்தத்தின் குணாம்சமே ஒத்த துருவங்கள் விலகிச்செல்லும். எதிரெதிர் துருவங்கள் ஈர்த்துக்கொள்ளும் என்பார்கள். மனித உடலில் மூளையை வடக்கு என்றும் பாதத்தை தெற்கு என்றும் சொல்வார்கள்.
இதனால்தான் வடக்கே தலை வைத்துப் படுக்கும்போது, வடக்கில் காந்தமண்டலம் இருப்பதால், அது நம்முடைய மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. எனவேதான் வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது.
http://news.lankasri.com/lifestyle/03/175351?ref=ls_d_lifestyle
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக