M.S.V isvanathan.
முதன் முதலாய் இந்தப் பாடலை இசையமைத்தவர் யார் என்று நான் கேட்டறிந்தவர் இந்த எம் எஸ் வி . படம் பாலும் பழமும். பாடல் ....'பாலும் பழமும் கைகளில் ஏந்தி ....' 'ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன். பின்னர் 'கொடியசைந்ததும் காற்று வந்ததா ...'எனக் கேட்டு ,'அன்று ஊமைப் பெண்ணல்லோ ,இன்று பேசும் பெண்ணல்லோ...என வீச்சு நடை போட்டது. இவருக்கென்று தனி சூத்திரம் ஒன்றை இவர் பாடல்களைக் கூர்ந்து கவனிப்பவர்கள் அறியலாம். ஒரு கிராமத்து பாடல் மெட்டை மூலதனமாகக் கொண்டு, அதற்கு தானறிந்த ராகங்களை பல வண்ணக் கலவையில் சேர்த்து அன்றைய நவீன இசை சேர்த்து பல பாவங்களில் பாடல்களை வெளிக் கொணர்வார். 'தாழையாம் பூமுடித்து ...' 'அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு....'
சரி, முற்றிலும் நவீன இசை பாவத்துடன் பாடல் கேட்டவருக்கு ,'கேட்டவறேல்லாம் பாடலாம் என் பாட்டுக்குத் தாளம் போடலாம்....'
உயர்ந்தமனிதனில்,' நாளை இந்த வேளை ....'சுசீலா அம்மையாருக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்தது. கர்ணன் படப் பாடல்களில்...எதைத்தான் விடுவது....?உள்ளத்தில் நல்ல உள்ளம்...'அல்லவா. தங்கப் பதக்கத்தில், அன்றையஇந்திப் பாடல்கள் தாக்கத்தையும் மீறி, 'நல்லதொரு குடும்பம்,பல்கலைக்கழகம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக