தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, June 27, 2012

தர்மத்தை வென்ற அதர்மம் ,,,....



தர்மத்தை வென்ற அதர்மம் ,,,....

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து காலங்களை நம் முன்னோர்கள் நான்கு யுகங்களாக வகுத்தார்கள் .அதாவது கிரேத யுகம் திரேதா யுகம் துவாபர யுகம் கலியுகம் ஐந்தாவதாக இனி வரபோவது சதுர் யுகம் என்றும் கூறுகின்றார்கள் .ஒவ்வொரு யுகங்களுக்கும் எந்த கால அளவை கொண்டு ஆண்டுகளை வகுத்தார்கள் என்பது இன்றுவரை உலக மக்களுக்கு ஒரு புரியாத புதிராகவே இருக்கின்றது .அதாவது கிரேத யுகம் 17 28000 ஆண்டுகள் என்றும் திரேதா யுகம் 12 96000ஆண்டுகள் என்றும் துவாபர யுகம்8 64000 ஆண்டுகள் என்றும் கலியுகம்4 32000 ஆண்டுகள் என்றும் கணிப்பிட்டார்கள் .இதை எவ்வாறு கணிப்பட்டார்கள் என்று இன்றுவரை எந்த ஒரு அறிவியல் ஆராய்வாளர்களாலும் சரியாக பதில்கூரமுடியவில்லை .ஆனால் நாம் பொதுவாக இந்த தொகைகளை அவதானிப்போம் ஆனால் கலியுக ஆண்டுகணக்கை கூட்டி கூட்டி முன்வந்த யுகங்களை கணித்து இருக்கின்றார்கள் என்பது புலனாகின்றது .இதிகாச புராண இலக்கிய வரலாற்று நூல்களை கொண்டு ஆய்வுகளை முன்வைத்தாலும் சரி வானசாஸ்திர நிபுணர் மயனதும் விஸ்வகர்மாவினதும் கருத்துக்களை முன்வைத்தாலும் சரி இந்த கணிப்பீடு தவறானதாகவே படுகின்றது .ஆனால் பின்வந்த அறிவியல் ஆய்வாளர்கள் யுகங்களின் கால அளவை சூரியன் சுற்றும் வருடங்களை கணக்கில் வைத்து கணித்தார்கள் அதன் படி கிரேத யுகம் 12000 வருடங்கள் என்றும் திரேதா யுகம் 2400 வருடங்கள் என்றும் துவாபர யுகம் 3600 வருடங்கள் என்றும் கலியுகம் 5800 வருடங்கள் என்றும் வரபோகும் சதுர் யுகம் 12000 என்றும் கணித்தார்கள் இவர்களது கணிப்பின் படி இன்னும் கலி யுகம் முடிவதற்கு 680 வருடங்கள் இருக்கின்றது .

முதலாவது கிரேத யுகத்தில் தான் உயிர் இனங்கள் தோன்றி பரிணாம வளர்சியடைந்து மனித இனமும் தோன்றியது. ,இவர்கள் பாம்பை பார்த்து நிமிரவும் விலங்குகளை பார்த்து தவழவும் நடக்கவும் கற்று கொண்டார்கள் .இவர்கள் அனைவரும் தீய எண்ணங்கள் இல்லாமல் நல்லவர்களாகவே வாழ்தார்கள் .தற்காப்புக்காக விலங்குகள் பாம்புகளை தாக்கினார்கள் ,மனிதர்களுக்கு சண்டை இல்லாமல் ஒற்றுமையாக வாழ்தார்கள். இவர்களுக்கு பாதிப்பை கொடுத்தது இயற்கையும் கொடிய விலங்குகளும் தான் .எனவே கிரேத யுகத்தில் வாழ்தவர்கள் நல்லவர்கள் .அடுத்து வந்த திரேதா யுகத்தில் நல்லவர்களும் தீயவர்களும் வேறு வேறான இடங்களின் வாழ்ந்தார்கள் .மனித குலத்தின் வளர்சியும் வாழ்விடங்களின் அதிகரிப்பும் இவர்களிடையே போட்டி வாழ்கையும் ஒருவரின் வாழ்வியல் முறையில் மற்றவர்களுக்கு ஏற்பட்ட கவர்ச்சியும் இவர்களிடையே பாகுபாட்டை தோற்று வித்தது.குறிப்பாக விலங்குகள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காத நல்லவர்கள் வழியில் தீயவர்கள் மூட நம்பிக்கைகளுடன் வந்து கலக்க தொடங்கிறார்கள் தீயவர்கள் செய்த யாகம் வேள்வி பலியிடும் வழக்கம் மிருக வதை கேளிக்கை நிகழ்வுகள் நல்லவர்கள் மனதை புண்படுத்தியது. இதனால் இவர்களுக்கிடையில் போர் மூண்டது. இதன் ஆரம்ப கால உதாரணமாக சூரன் போர் நடந்த கந்த புராண காலத்தை சொல்லலாம் இந்த யுகத்தின் முடிவு காலமாக இராமன் இராவணன் யுத்தத்தை சொல்லலாம் .

அடுத்து வந்த துவாபர யுகத்தில் நல்லவர்களும் தீயவர்களும் இரண்டற கலந்தே வாழ்தார்கள் இவர்களுக்குள் அதிகார போட்டிகள் ஆசைகளால் ஏற்பட்ட தகராறுகள் என தொடர்சியாக சண்டை இட்டபடியே வாழ்தார்கள் இரு பகுதியினரும் அழிந்தார்கள் அனேகமாக உறவினர்களுக்கு இடையே கூட மோதிக்கொண்டார்கள் இதற்க்கு உதாரணமாக மகா பாரத போரை சொல்லலாம். அடுத்து கலியுகம் இந்த யுகம் மிகவும் வித்தியாசம் ஆனது யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று யாராலும் அறிய முடியாத காலம் நல்லவர்கள் என்று நம்பிக்கைக்கு உரியவர்கள் பல சந்தர்பங்களில் கெட்டவர்கள் ஆகி ஏமாற்றி விடுகின்றார்கள். கெட்டவர்கள் தான் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் நல்லவர்களாக மாறி விடுகின்றார்கள்.இதனால் இந்த காலம் மிகவும் மோசமானதாகவே உலகில் நகர்கின்றது .எல்லோரும் முடிவில் தர்மம் வெல்லும் என்கின்றார்கள் .ஆனால் உலக ஒழுங்கில் நாம் ஒரு திடமான மனநிலையில் இருந்து சிந்தித்து பார்ப்போம் ஆனால் எதிர் மறை விளைவுகளே எமக்கு தென்படுகின்றது .தர்மம் தோற்று கொண்டுதான் போகின்றது. இந்நிலை தொடருமானால் அடுத்து வரபோகும் சதுர் யுகத்தில் அதர்ம வாதிகள் மட்டுமே வாழ்வார்கள் அதாவது கெட்டவர்கள் மட்டுமே வாழ்வார்கள் ,,,,,,நல்லவர்கள் அனைவரும் சொர்க்கத்துக்கு போய்விட்டார்கள் என்று குழந்தைகளுக்கு சொல்வது போல் சொல்லி நாமும் ஆறுதல் அடைவோம் ,,,,,,,,,
 —



சிவ மேனகை

No comments:

Post a Comment