தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 26 ஜூன், 2012

சீர்காழி கோவிந்தராஜன் !!



சீர்காழி கோவிந்தராஜன்

அன்றைய காலத்தில் ,’நீ அல்லால் தெய்வம் இல்லை ,எனது நெஞ்சே நீ வாழும் எல்லை ,முருகா !..’ என்று பாடி இறுதி வரை பல தெய்வப் பாடல்கள் தந்தவர். இவர் தமிழ் திரை வானிலும் பல இன்னிசை பாடல்களை நமக்குத் தந்தவர். எனக்குத் தெரிய இவரது முதல் திரைப் பாடலாய் நான் ரசித்தது , ‘அமுதும் தேனும் எதற்கு ...’ தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில். உயரிய ராகத்தில் ,தெளிவான உச்சரிப்பில் , கணீரென்று அன்று பாடியது இவர் ஒருவரே. அந்த இடத்தை இன்னும் யாரும் பிடிக்கவில்லை என்றே சொல்லலாம். பிறகு வரிசையாக, ‘சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் ... ‘ நல்லவன் வாழ்வானிலும், ‘தங்கக் கிளியே மொழி பேசு ...’ வீரக்கனல், ‘செங்கனிவாய் திறந்து சிரிதிடுவாய் .....’இது, யானைப் பாகனில்.. தத்துவப் பாடலாய் ,’ உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதேங்கே சொல் என் தோழா.....’ மன்னாதி மன்னன்.; ’சமரசம் உலாவும் இடமே...’ ரம்பையின் காதல். ‘சிரிப்பவர் சில பேர் அழுபவர் பல பேர்....‘ சபாஷ் மாப்பிள்ளே, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா...’நீர்க்குமிழியை மறக்க முடியுமா....! நாட்டுப் பாடல்களை திரையில் இவர் பாடிய, ‘ ஆத்துல தண்ணி வர அதில் ஒருவன் மீன் பிடிக்க, ,காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக் கொண்டு போவதும் ஏன் கண்ணம்மா! ...வண்ணக் கிளியிலும், ‘பட்டணந்தான் போகலாமடி... ’எங்க வீட்டு மகாலக்ஷ்மியில் பாடிக் களித்தவர். ‘கண்ணே வண்ணப் பசுங்கிளியே .,கண்ணே என் தாரகையே கண்ணு றங்காயோ....’யானை வளர்த்த வானம பாடி ...நெஞ்சை இன்னும் தாலாட்டுகிறது. அறுபடை வீடு கொண்ட.....முருகனைத் தொடர்ந்து , கர்ணனைக் கொன்ற பாவியாய் கண்ணபிரானை மனம் உருகிபாடச் செய்த ,’உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது...... இவர் பாடல்களை கேட்பவர்க் கெல்லாம் விளங்கும்.
‘தொட்ட இடம் துலங்க வரும் தாய்க் குலமே வருக......பாடல், ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி......இவர்தம் பாடல் மனதில் நிழலாடாத நெஞ்சமில்லை.
 —

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக