தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 27 ஜூன், 2012

கனடாவின் சிறந்த பாடகி மகிஷா!!



கனடாவிலிருந்து தமிழ் நாட்டிற்குச் சென்று விஜய் ரி.வியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்ச் சிறுமி மகிஷாவிற்கு கனடாவின் சிறந்த பாடகி என விஜய் ரி.வி நிகழ்ச்சி நடுவர்கள் குழு புகழாரம் சூட்டியுள்ளது. இந்த வாரம் நடைபெற்ற போட்டியின் போது மகிஷாவின் இசைப் பயணம் நிறைவுக்கு வந்துள்ளது. இருப்பினும் கனடியத் தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறை சாற்றிய சிறுமி மகிஷா என்பதில் எந்த ஐயமுமில்லை.

சிறுமி மகிஷா கடந்த ஏழெட்டு மாதங்களாக போட்டியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்னை சென்று தங்கினார். உண்மையில் சொல்லப் போனால் முதலில் மகிஷா இந்த அளவிற்கு முன்னேற்றம் பெறுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. பல ஆயிரக்கணக்கானோரின் குரல் தேடலுக்கு நடுவே சிறந்த 12 பேரில் ஒருவராக மகிஷா தெரிவு செய்யப்பட்டது மிகப்பெரிய சாதனை என்று தான் கூற வேண்டும்.

பிரபல பாடகர்களை உள்ளடக்கிய நிகழ்ச்சியின் நடுவர் குழுவினரே மெய்சிலிர்க்கும் வகையில் ஒவ்வொரு போட்டியின் போதும் பாடுவதில் தன் திறமையை காட்டி வந்துள்ளார் மகிஷா. போட்டியிலிருந்து நீக்கப்பட்டாலும் கூட உலகத் தமிழர்கள் அனைவரின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்து விட்ட சோதனைகளை சாதனையாக்கிய சிறுமி மகிஷாவைமனமாரப் பாராட்டுகிறது தமிழறிவு!!.

வாழ்த்துக்கள் மகிஷா!!!
 —
நடுவர்களின் துரோகத்தால் வெளியேற்றப்பட்ட மகிஷா அவரை வெளியேற்றிய விஜய் தொலைக்காட்சியால் சிறந்த பாடகி என பாராட்டப்படுகிறார் என்றால் யாருக்கு பைத்தியம்????????சென்ற தடவை நான்கு பேர் சம புள்ளி எடுத்ததாக கூறி ஒருவரும் வெளியேற்றப் படவில்லை,இம்முறை மகிஷாவை விட வேறு ஒருவர் வெளியேற்றப்பட சந்தர்ப்பம் இருந்தது,இருந்தும் திட்டமிடப்பட்ட முறையில் விஜய் தொலைக்காட்சி அவரை ஈழத்தமிழர் என்றதால் வெளியேற்றியது,அமரிக்காவி சேர்ந்த இந்தியப்பெண் வரிகளைகூட தவறாக பாடினார்,அவருக்கு சாக்கிலேட் மழை கொடுத்து கௌரவித்தார்கள்,நம்மை முட்டாளாக்க தோற்றதாக அறிவிகப்பட்டவருக்கு சிறந்த பாடகி என்ற கௌரவம் கொடுத்து தமது முட்டாள்த்தனத்தை காட்டியுள்ளார்கள்.தங்கிலீசில் நிகழ்ச்சி நடாத்தும் நடுவர்களாக தெலுங்கு,மலையாளிகளை கொண்ட அந்நிய தொலைக்காட்சிகளை தமிழ்நாட்டிலிருந்து விரட்டாவிட்டால் தமிழரும் தமிழ் கலாச்சாரமும் சிறுவரிலிருந்து அனைவருக்கும் மறக்கடிக்கப்பட்டு ஆங்கில கலாச்சாரமும் குத்தாட்டமும் போதிக்கப்படும்.தங்கிலநாடு ஆங்கிலநாடாகும்,தமிழன் மீண்டும் அகதியாகி அலைவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக