கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திகொண்டிருக்கும் நிலையில், இந்தியாவிலும் தீயாய் பரவி வருகிறது, இந்தியாவில் இதுவரை 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் எங்கு எத்தனை நாள்கள் உயிர் வாழும் என்பதை பற்றி முழு விபரத்தை பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சியை அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் SARS-CoV-2 என்ற கொரோனா வைரஸ், தும்மலின் போது வெளியாகும் நீர்துளிகளால் காற்றில் பரவும் வைரஸ் 3 மணி நேரம் வாழ கூடியவை என கூறப்பட்டுள்ளது.
மனித முடியை விட 30 மடங்கு சிறியதான வைரஸ், காற்றில் பல மணி நேரம் உயிர் வாழக் கூடியவை. இந்த வைரஸ், அட்டை பொருட்களின் மீது 24 மணி நேரம் வாழக்கூடியவை. பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மேற்புறங்களில் 2 முதல் 3 நாள்கள் வரை வாழக்கூடியவை. கண்ணாடி மீது 96 மணி நேரங்கள் உயிருடன் இருக்க கூடியவை.
கதவு கைப்பிடிகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட மற்றும் லாமினேட் செய்யப்பட்ட மேல்பரப்புகளில் அதிக நாள்கள் உயிருடன் இருக்கும். ஆனால், தாமிர தகடுகள் வைரசை 4 மணி நேரத்தில் கொல்லும் தன்மையுடையவை என கூறப்படுகிறது.
மேற்பரப்புகளை 62 முதல் 71 சதவிகிதம் ஆல்கஹால் கலந்த கிருமி நாசினியை தெளிப்பதன் மூலம் கொரோனா வைரசை ஒரே நிமிடத்தில் அழித்து விடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் சோடியம் குளோரைட் கலந்த ஹைட்ரஜன் பெராக்சைட் பிளிச்சை கொண்டு தூய்மைப்படுத்துவதன் மூலமும் கொரோனா வைரசை விரைவாக அழிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேப்போல் 56 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் கொரோனா வைரஸ் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள கூறுகின்றனர். 56 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 15 நிமிடங்களில் 10 ஆயிரம் வைரஸ் துகள்கள் கொல்லப்படும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக