வேகமாக பரவும் கொரோனா வைரஸ் நமக்கும் தொற்றிவிட்டதோ என்ற அச்சத்தில் மருத்துவமனைகளில் சென்று விவரத்தை கூறுகின்றனர் பலர்.
அவர்களுக்கு, சில மருத்துவர்கள் இது குறித்து புரிய வைக்கின்றனர். சில நேரங்களில் சந்தேகம் என்ற பெயரில் வரும் நோயாளிகளால் உண்மையான நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பது தாமதமாகிறது.
எனவே இதுபற்றிய விழிப்புணர்வு பொதுமக்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
யாருக்கெல்லாம் பரிசோதனை தேவை?
சீனாவின் வுஹான் நகரத்தில் உருவானா கொரோனா வைரஸ், அங்கு சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணக்களுக்காக சென்ற மக்களுக்கும் பரவியது. தங்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியாமல் அவர்களின் சொந்த நாடுகளுக்கு சென்ற மக்கள் பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவியது.
உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ் தங்களையும் தாக்குமா என மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். ஆனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளவர்கள் தான். எனவே அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்க்காக தான் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஒருவேளை உங்கள் உறவினர்களோ, உங்கள் நண்பர்களோ கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளுக்கு சென்று வந்தால் அவர்களிடமிருந்து மற்றவருக்கு பரவும் வாய்ப்புகள் அதிகம்.
ஒருவேளை நீங்கள் அப்படி வந்தவர்களிடம் தொடர்பில் இருந்து, உங்களுக்கு தொடர்காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்ட உடல் உபாதைகள் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவம் அளிக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்றவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அவர்கள் தாமதப்படுத்தாமல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
குறிப்பாக 60 வயதிற்கு அதிகமானவர்களுக்கு நோய் தாக்கும் அபாயாம் அதிகமாக இருப்பதால் வயதானவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்கள் காலம் தாழ்த்தாமல் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
கொரோனாவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அரசு மற்றும் மருத்துவர்கள் வழங்கக்கூடிய ஆலோசனைகளை பின்பற்றுவது அவசியம். அதன்படி அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல், முகத்தை அடிக்கடி கைகளால் தொடாமல் இருத்தல், இருமும் போதும் தும்மும் போதும் கைகுட்டையை பயன்படுத்த வேண்டும்.
மேலும் பிறரிடமிருந்து வைரஸ் பரவுவதை தடுக்க முகமூடிகள் அணிதல் என தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசு எடுக்கக்கூடிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் மக்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்கினால் கொரோனா நோயின் தாக்கத்திலிருந்து எந்த பாதிப்பும் இல்லாமால் பாதுகாப்பாக இருக்கலாம்.
Sye Raa Narasimha Reddy Full Movie Free Download ↓
பதிலளிநீக்குDownload Full Movie