தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 29 மார்ச், 2020

யாழ்ப்பாணத்து பழைய கலாச்சாரம் - வைரஸ்சை விரட்டும் முறைகள்!

அடியே வெளியிலே தூர இடம் எங்காவது போவதாக இருந்தால் கொண்டையிலே இரும்பு ஆணி செருகிக் கொண்டு போ
வெளியாலே எங்காவது சாப்பாடு கொண்டு பொவதாக இருந்தால் ஒரு கரித்துண்டு வைத்து எடுத்துக் கொண்டு போ
நடு மத்தியானம் புளிய மரத்துக்கு கீழே குமர்ப்பிள்ளையாக இருந்தால் போகாதே பேய் இருக்குது பிடித்துப் போடும்.
பிள்ளையைப் பெற்று இருந்தால் ஒதியம் பட்டையும் பாவட்டை இலையும் போட்டு அவித்த தண்ணீரிலே குளித்துக் கொள்.
அடிக்கடி குழந்தைக்கு இருமல் வருகின்றதா குக்கல் என்ற இந்த நோய்க்கு புங்கங்காயும் புலித்தோலும் கழுத்திலே கட்டிவிடு.
குழந்கைக்கு சளி இழுக்குதா சொட்டு இலுப்பெண்ணையை நெஞ்சிலே தடவி விடு. அல்லது கற்பூரவெள்ளி இலையை வாட்டி உச்சியிலே வைத்துவிடு. சரியாகிப் போகும்.
தொண்டை வீங்கிக் கூவைக் கட்டா பவுண் சங்கிலியை கழுத்திலே போட்டு விடு.
காலிலே விச முள்ளுக் குத்தி விட்டதா அந்த இடத்திலே உப்புக் கல்லு வைத்து நெருப்புக் கொள்ளியால் சூடு போடு சரியாகி விடும்.
பழைய தகரம் கத்தி வெட்டி விட்டதா உடனே மரமஞ்சள் அவித்துக் குடி ஏற்பு ஆக்காது.
குளவி குத்தி விட்டதா உடனே புளி அல்லது சுண்ணாம்பு எதுத்துத் தடவு விசம் ஏறாது.
காதுக் குத்தா உள்ளிப் பல்லு ஒன்றைச் சுட்டுப் போட்டு காதுக்குள்ளே வை
ஏதாவது அழுக்குகளைத் தொட்டு நகம் கொதிக்கின்றதா கத்தரிக்காயை அடுப்பிலே வாட்டி மஞ்சள் தூள் கலந்து கட்டிவிடு சரியாகிப் போகும்.
இரா.சம்பந்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக