தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, February 9, 2019

உங்களுக்கு துணையாக இந்த ராசிக்காரர்கள் கிடைத்தால் போதும்.. அப்புறம் நீங்க தான் அதிர்ஷ்டசாலி..!


இந்த ராசிகளில் பிறந்தவர்கள் காதலன்/காதலியாக கிடைப்பது என்பது மிகவும் அதிர்ஷ்டமாகும்.
கடகம்
ராசிகளிலேயே கடக ராசிதான் அதிக உணர்ச்சிவசப்படக்கூடிய ராசி என்று கூறப்படுகிறது. அதனாலதான் அவர்கள் எப்பொழுதும் தாங்கள் பெறுவதை பல மடங்கு திருப்பி கொடுக்கிறார்கள். காதலில் இவர்களை போட்டி போட்டு வெல்வது என்பது மிகவும் கடினமான காரியமாகும்.
இவர்களுடனான உறவு அவர்களின் துணைக்கு அளவற்ற மகிழ்ச்சியை வழங்குவதாக இருக்கும். தங்களின் சொந்த விஷயங்களை சமாளிக்க திணறும் போது கூட இவர்கள் மற்றவர்களுக்கு உதவ முன்வருவார்கள். அளவுக்கதிகமாக யோசித்தாலும் இவர்கள் அளவுக்கதிகமாக காதலிப்பவர்கள்.
இவர்கள் நேர்மையும், இரக்கமும் கொண்டவர்கள் அனைத்திற்கும் மேலாக அதிகம் காதலிப்பவர்கள். இவர்களின் பண்புகளை பகிர்ந்து கொள்ளும் துணைதான் இவர்களுக்கு தேவை. இவர்களின் மென்மையான இதயம் விரும்புவது நம்பிக்கைக்குரிய அன்பான ஒரு இதயத்தை.
மீனம்
மீன ராசிக்காரர்கள் மென்மையானவர்கள் மட்டுமல்ல புத்திசாலிகளும் கூட. மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல செயல்படக்கூடியவர்கள்.
அடிக்கடி சண்டை போட மாட்டார்கள், கோபம் தணிந்து எப்பொழுது அமைதியான சூழ்நிலை மீள்கிறதோ அப்போதுதான் பேசுவார்கள். எந்த நேரத்தில் என்ன பேச வேண்டம் என்று நன்கு உணர்ந்தவர்கள் இவர்கள்.
சுயநலமில்லாத இவர்கள் தங்களின் துணைக்காக எதை வேண்டுமென்றாலும் செய்ய தயங்கமாட்டார்கள். பொறுமை மற்றும் புரிந்து கொள்ளும் திறனே இவர்களின் தனிச்சிறப்பு. அதற்காக எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற எண்ணத்திற்கு வந்திவிடக்கூடாது.
அனைத்திற்கும் ஒரு எல்லை உள்ளது. அவர்களை மதித்து அன்பு செலுத்தினால் போதும் நீங்கள் எதிர்பார்க்காத மகிழ்ச்சி உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.
துலாம்
ராசிகர்களின் அதீத சமநிலை உணர்வே அவர்களை சிறந்த துணையாக இருக்க வைக்கிறது. சுறுசுறுப்பும், இரக்க குணமும் இவர்களை மற்றவர்களிடம் இருந்து தனித்துவத்துடன் காட்டும்.
உறவில் இருக்கும்போது அவர்கள் எப்பொழுதும் தங்கள் துணையை சமமாக நடத்துவார்கள், கவனிப்பார்கள், பாராட்டுவார்கள், காதலை கொடுத்து பெறுவார்கள். அனைவரும் தங்கள் வாழ்க்கையில் விரும்பும் மகிழ்ச்சியை துலாம் ராசிக்காரர்கள் எளிதில் வழங்கக்கூடியவர்கள். உங்கள் காதலனோ/காதலியோ துலாம் ராசிக்காராக இருந்தால் உங்கள் முகத்தில் எப்பொழுதும் புன்னகை இருக்கும் என்பது மட்டும் உறுதி.
மகரம்
மகர ராசிக்காரர்களை காதலில் வீழ்த்துவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல, ஆனால் வீழ்த்திவிட்டால் நீங்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
மகர ராசிக்காரர்கள் எப்பொழுதும் குறுகிய கால உறவுகளை விரும்ப மாட்டார்கள், நீண்ட கால உறவில் இருக்கும்போது தங்கள் துணையை கண்ணின் மணி போல காதலிப்பார்கள்.
நீங்கள் விரும்புவது போல எந்த நிபந்தனைகளும் இன்றி உங்களை காதலிக்க இவர்களால்தான் முடியும். தான் காதலிப்பது போல தானும் காதலிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இவர்கள். எந்தவொரு மோசமான சூழ்நிலையும் சரியாகி விடும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள்.

https://www.manithan.com/spiritual/04/205664?ref=right-popular-cineulagam

No comments:

Post a Comment