தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, February 13, 2019

நீங்கள் இதில் எந்த எண்? இந்த அதிர்ஷ்ட பொருட்களை வீட்டில் வைப்பதால் செல்வம் பெருகுமாம்!

ஜோதிடத்தின் படி நாம் பிறந்த தேதியின் எண்ணிற்கென ஒரு தனி குணம் இருக்கும்.
அதன்படி உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை உண்டாக்க சில குறிப்பிட்ட பொருட்களை வீட்டில் வைத்தால் உங்கள் வீட்டில் வைப்பது உங்கள் வாழ்க்கையில் அமைதியையும், செல்வ செழிப்பையும் ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
அந்தவகையில் உங்கள் பிறந்த தேதியின் படி உங்கள் வீட்டில் வைக்க வேண்டிய அதிர்ஷ்ட பொருள் என்னவென்று பார்க்கலாம்.
எண் 1
உங்கள் பிறந்த தேதியின் எண் 1 ஆக இருந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் ஆவீர்கள். உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க நீங்கள் வீட்டில் வைக்க வேண்டிய பொருள் புல்லாங்குழல் ஆகும்.
இந்த புல்லாங்குழலை உங்கள் வீட்டின் வடக்கு திசையில் வைக்கவும். நீங்கள் வைக்கும் புல்லாங்குழல் மரத்தால் செய்யப்பட்டதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
எண் 2
எந்த மாதத்திலும் இரண்டாவது எண்ணில் பிறந்தவராக நீங்கள் இருந்தால் உங்கள் வீட்டில் வடக்கு திசையில் வெள்ளை நிற சங்கை வைத்துக்கொள்ளுங்கள்.
இது உங்கள் இல்லத்திற்கு நேர்மறை தோற்றத்தை வழங்கும், மேலும் உங்கள் இல்லத்தை நோக்கி வரும் எதிர்மறை சக்திகளை விரட்டியடிக்கும்.
எண் 3
உங்களுடைய பிறந்த எண் 3 ஆக இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் திசை வடகிழக்கு ஆகும். எனவே உங்கள் வீட்டில் வடகிழக்கு திசையில் ருத்திராட்சத்தை வையுங்கள்.
இந்த ருத்திராட்சம் உங்களுக்கு ஈசனின் அருளை பெற்றுத்தருவதோடு உங்கள் வாழ்க்கையில் உள்ள இருளையும் அகற்றும்.
எண் 4
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டுத்தொகை 4 ஆக இருந்தால் நீங்கள் வீட்டில் வைக்கவேண்டிய பொருள் சில கண்ணாடித் துண்டுகளாகும்.
இதனை உங்கள் வீட்டில் தென்மேற்கு திசையில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த கண்ணாடி துண்டுகள் உடைந்ததாக இருக்கக்கூடாது, அதேசமயம் கலைந்தும் இருக்கக்கூடாது.
உடையாத கண்ணாடி துண்டுகளை ஒரே இடத்தில வைக்கவும். காயம் ஏற்படுத்தாத வகையில் கண்ணாடிகளை வைக்கவும்.
எண் 5
பிறந்த நாளின் கூட்டுத்தொகை 5 ஆக இருக்கும்போது உங்கள் வாழ்க்கையில் லட்சுமி தேவியின் அருள் குறைவாக இருக்கும்.
எனவே உங்கள் வீட்டில் வடக்கு திசையில் குபேரர் அல்லது லட்சுமி தேவியின் உருவப்படத்தை வைக்கவும். வீட்டில் லட்சுமி தேவி இருப்பது உங்கள் வீட்டிற்கு செல்வ செழிப்பை கொண்டுவரும்.
எண் 6
உங்கள் பிறந்த எண் 6 ஆக இருந்தால் உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் அதிர்ஷ்ட பொருள் மயில் இறகு ஆகும். இந்த மயிலிறகை தென்கிழக்கு திசையில் வைக்கவும்.
கிருஷ்ணரின் அடையாளமாக கருதப்படும் இந்த மயிலிறகு உங்கள் வாழ்வில் செல்வத்தையும், அமைதியையும் கொண்டுவரும்.
எண் 7
உங்களின் பிறந்த எண்ணின் கூட்டுத்தொகை 7 ஆக இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கும் பொருள் ருத்திராட்சம் ஆகும்.
அடர் பழுப்பு நிறமுள்ள பஞ்சமுக ருத்திராட்சத்தை உங்கள் இல்லத்தின் தென்கிழக்கு திசையில் வைப்பது உங்களுக்கு வாழ்க்கையில் மேன்மையையும் தரும்.
எண் 8
உங்கள் பிறந்த எண்ணின் கூட்டுத்தொகை 8 என அமைந்தால் நீங்கள் கருப்பு படிகத்தை உங்கள் வீட்டில் வைக்க வேண்டும்.
இதனை தெற்கு திசையில் வைப்பது சிறப்பான விஷயமாகும். இந்த கருப்பு படிகம் உங்கள் வீட்டிற்குள் நுழையும் அனைத்து எதிர்மறை சக்திகளையும் விரட்டுவதோடு உங்கள் இல்லத்திற்குள் நல்ல சக்திகளை கொண்டுவரும்.
எண் 9
உங்கள் பிறந்த எண்ணின் கூட்டுத்தொகை 9 ஆக இருந்தால் நீங்கள் வீட்டில் வைக்க வேண்டிய பொருள் பிரமிட் ஆகும்.
இதனை தெற்கு திசையில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நல்ல மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.

No comments:

Post a Comment