தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, February 6, 2019

இயற்கை அதிசயம்.. இன்சுலின் செடியினை பார்த்து வியக்கும் விஞ்ஞானிகள்? சர்க்கரை நோயாளிகளே மகிழ்ச்சியுடன் படிக்கவும்!


சர்க்கரை நோய் என்றாலே 'அது பணக்காரர்களுக்கு வரும் நோய்' என்பார்கள். ஆனால் தற்போது அது எல்லா தரப்பு மக்களையும் பாதித்து வருகிறது.
உலகம் முழுவதும் இந்த சர்க்கரை நோய் வேகமாக பரவி வருகிறது என்பது தான் உண்மை.
எனவே இது குறித்து புது புது ஆராய்ச்சிகளும் புதுப் புது மருந்துகளும் கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர். அப்படி தற்போது கொண்டு வரப்பட்ட ஒன்று தான் இந்த இன்சுலின் செடி. விஞ்ஞானிகளே இயற்கை மருத்துவத்தின் மகிமைகளை பார்த்து வியந்து போகின்றனர்.
இன்சுலின் செடியை ஒரு மேஜிக்கல், இயற்கை மூலிகை என்றே கூறலாம். இந்த செடியை கொண்டு சர்க்கரை நோய் மட்டுமல்லாது சிறுநீரகக் கற்கள், இரத்த அழுத்தம் மற்ற பிரச்சினைகளையும் சரி செய்ய இயலும்
இன்சுலின் செடி
இதனால் காஸ்டஸ் பிக்டஸ் என்ற இந்த இன்சுலின் செடியின் தேவையும் இப்பொழுது அதிகரித்து வருகிறது.' இந்த இன்சுலின் செடி இருந்தாலே போதும் உங்கள் சர்க்கரை நோய்க்கு பை பை' சொல்லிடலாம் என்று எங்கு பார்த்தாலும் விளம்பரங்களும் பரவி வருகிறது.
இது நீரழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்லாது ஆரோக்கியமாக உடலை பேண விரும்புவர்களுக்கும் பயன்களை அள்ளித் தருகிறது.
இன்சுலின் இலைச் சாறு தயாரிப்பது எப்படி?
10-15 இன்சுலின் இலைகளை எடுத்து சுத்தமாக கழுவி கொள்ளுங்கள். அதை சிறியதாக நறுக்கி சூரிய ஒளியில் காய வையுங்கள். இலையை பிழிந்து பார்த்து நன்றாக காய்ந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும்.
நன்றாக காய்ந்த இலைகளை ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைக்கவும் 1 கப் தண்ணீரை எடுத்து நன்றாக கொதிக்க வையுங்கள். கொதித்த தண்ணீரை ஒரு டம்ளரில் ஊற்றி அதில் இலைகளை போடவும் தண்ணீர் ப்ரவுன் நிறமாக மாறும் வரை காத்திருக்கவும்.
இந்த தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இன்சுலின் இலை டீ
தேவையான பொருட்கள்
  • 5-7 இன்சுலின் இலைகள்
  • 4 கப் தண்ணீர்
  • தேன்
பயன்படுத்தும் முறை
இன்சுலின் இலைகளை கழுவி காய வைத்து எடுத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வையுங்கள். கொதிக்கின்ற தண்ணீரில் இலைகளை போடவும்.
தண்ணீர் பாதியளவு வற்றும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு வடிகட்டி ஒரு கப்பில் எடுத்து கொள்ளுங்கள். பிறகு சுவைக்கு தேனை சேர்க்கவும்.
பக்க விளைவுகள்
  • கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் இந்த செடியை சாப்பிடக் கூடாது.
  • ஏனெனில் இது ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். இலையை அப்படியே பச்சையாக சாப்பிடுவதை தவிருங்கள். இதன் கடினமான தன்மை எரிச்சலை உண்டு பண்ணக் கூடும்.

No comments:

Post a Comment